India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. மேலும் இன்று முகூர்த்த நாள் என்பதால், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ஈரோடு, கே.கே. நகர் ரயில் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
பவானி அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு புதிய வங்கிக் கணக்கு எண் மற்றும் ஆதார் எண் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஈரோடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதிய கணக்கு எண் வழங்கும் நிகழ்ச்சியை பவானி நகர்மன்ற தலைவர் சிந்துரி இளங்கோ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தலமலை ஊராட்சிக்குட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலை கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் கடந்த 16 நாள்களில் வாந்தி, பேதியால் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவக் குழுவினர், உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை ஆகியோர் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து தண்ணீர் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
கோபி அருகே கொங்கர்பாளையம் மாரியம்மன் கோயில் பகுதியில் பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. விசாரணையில் சுமார் ரூ.19,200 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளையும், லாட்டரி விற்ற பணம் ரூ.13,000 ரொக்க தொகையையும் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, பெரியாா் நகரில் உள்ள மனவளக்கலை மன்றம் அறிவுத் திருக்கோயிலில் புதிய யோகா வகுப்புகள் நாளை (10ஆம் தேதி) தொடங்கவுள்ளது. நாளை முதல் 24ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 8.30 மணி வரை ஆண்களுக்கும், காலை 10.30 மணி முதல் 12.30 மணி பெண்களுக்கும் யோகா வகுப்பு நடைபெற உள்ளது என ஈரோடு மனவளக்கலை மன்ற நிா்வாக அலுவலா் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அடுத்த சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் மின்பாதைகளில் நாளை பாராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் ஈரோடு சி.எஸ்.நகர், தண்ணீர்பந்தல் பாளையம், ஈ.பி.பி.நகர், மாமரத்துப்பாளையம், செந்தமிழ்நகர், எல்லப்பாளையம், பெரியசேமூர், சின்னசேமூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு மத்திய அரசால் ஜீவன் ரக் ஷா, சர்வார்த்தம் ஜீவன் ரக் ஷா, உத்தம் ஜீவன் ரக் ஷா பதக்கங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. www.sdat.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு-3க்கு அனுப்ப வேண்டும் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் என இரண்டு வகையான ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணியிடங்களுக்கு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வரும் 10 ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 2 மணி வரை நேர்முகத்தேர்வு நடக்க உள்ளது என ஈரோடு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் ஆசனூர் மற்றும் பர்கூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என 7 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் சேர்த்து முன்னுரிமை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற்று கல்வி பயிலலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.