Erode

News June 6, 2024

ஈரோடு : கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல் 10.07.2024 வரை கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் இருக்க, இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

ஈரோடு: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோட்டில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 6, 2024

ஈரோடு: ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

image

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி திருத்தப்படி , ‘விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு’ இணைய தளம் பற்றிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.  உற்பத்தியாளர், இறக்குமதியாளர், வியாபார தர அடையாள உரிமையாளர், தொழிற்சாலைகள் போன்றவை pwmsec@tnpcb.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

ஈரோடு : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்

image

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு ஓடை பள்ளத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே ஈரோடு, மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News June 6, 2024

அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மரியாதை

image

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், விசிக சார்பில், சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் பொது செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். எனவே, நேற்று ஈரோடு பி.எஸ்.பார்க்கில் உள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு ஈரோடு, திருப்பூர் மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி தலைமையில் விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினர்.

News June 5, 2024

ஈரோட்டில் கனமழைக்கு வாய்ப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோட்டில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 5, 2024

ஈரோடு: டெபாசிட் இழந்த நாம் தமிழர், த.மா.கா.!

image

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று(ஜூன் 4) நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 5,62,339 வாக்குகளுடன் 2,36,566 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 3,25,773 வாக்குகளுடன் அதிமுகவை சேர்ந்த அசோக்குமார் 2 ஆம் இடம் பிடித்தார். நாம் தமிழர் 82,796 வாக்குகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் 77,911 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தனர்.

News June 5, 2024

ஈரோடு தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் பிரகாஷ்- 5,62,339 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார்- 3,25,773 வாக்குகள்
*நாதக வேட்பாளர் கார்மேகம்- 82,796 வாக்குகள்
*தமாகா வேட்பாளர் விஜயகுமார்- 77,911 வாக்குகள்

News June 4, 2024

திமுக சார்பில் வெற்றி கொண்டாட்டடம்

image

நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, வெற்றியை கொண்டாடும் விதமாக ஈரோடு வடக்கு மாவட்டம் டி.என். பாளையம் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எம். சிவபாலன் தலைமையில் அண்ணா சிலை, பங்களாபுதூர், கணக்கம்பாளையம் கலைஞர் சிலை, கள்ளிப்பட்டி காந்தி சிலை ஆகிய பகுதிகளில் மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

News June 4, 2024

ஈரோடு: 9வது சுற்று நிலவரம்

image

ஈரோடு மக்களவை தொகுதியில் 9வது சுற்று முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 2,46,563 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 1,50,012 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளனர். நாதக வேட்பாளர் கார்மேகம் 38,787 வாக்குகள் பெற்றுள்ளார். நடந்து முடிந்த 7 சுற்றுகளில் பிரகாஷ் 96,551 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

error: Content is protected !!