India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் என இரண்டு வகையான ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணியிடங்களுக்கு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வரும் 10 ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 2 மணி வரை நேர்முகத்தேர்வு நடக்க உள்ளது என ஈரோடு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் ஆசனூர் மற்றும் பர்கூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என 7 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் சேர்த்து முன்னுரிமை மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற்று கல்வி பயிலலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://me-qr.com/rxKmeKR4 என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் அறிவிப்பு மார்ச் 16ஆம் தேதி வெளியானது. எனவே ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதால் , வரும் 10ஆம் தேதி முதல், மக்கள் குறைதீர் நாள் முகாம் வழக்கம்போல் நடைபெறும் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ) உள்ளது. இந்த பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக ஜூன் 7ஆம் (இன்று) வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, கடைசி நாள் ஜூன் 13 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://me-qr.com/rxKmeKR4 என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில், மொத்தம் 1,35,000-க்கும் மேற்பட்டோர் வரி செலுத்துகின்றனர். இதுவரை மாநகராட்சியில் சொத்து, குடிநீர், திடக்கழிவு, குத்தகை இனங்களில் 82% வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, தாமதமான வரி வசூல் பணிகள், ஜூன் 10ஆம் தேதி முதல் மீண்டும் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அந்தியூர் அருகே மேற்கு காடு பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் 53 மது போதைக்கு அடிமையானார் நேற்று மாலை மது போதையில் கீழே விழுந்தவர் மயங்கி கிடந்தார் அவரை மீட்டு அவரது மனைவி மீனா அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கூட்டி சென்றார் மருத்துவர்கள் பரிசோதித்ததில் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
ஈரோடு மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல் 10.07.2024 வரை கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் இருக்க, இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.