India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை ஓராண்டு பயிற்சி நடப்பாண்டு தொடங்கப்பட உள்ளது. 17 வயது பூா்த்தி அடைந்தவா்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்தி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0424-2998632 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் தெரிவித்துள்ளார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட
வரும் 21ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இன்று தெரிவித்துள்ளார்.
கொடுமுடி தாலுகா சிவகிரி கொங்கு மஹாலில் வரும் 23ம் தேதி காலை 6.30 மணிக்கு துவங்கி நடைபெறும் சிவகிரி மாரத்தான் போட்டி , 1 கி.மீ, 3கி.மீ, 5கி.மீ, 10கி.மீ, 15கி.மீ என 5-பிரிவுகளில் நடைபெறுகிறது. மொத்த பரிசுத்தொகை ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 15க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் 83449 41266, 97888 87888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாளையொட்டி அமைச்சர் சு. முத்துசாமி இன்று திண்டலில் உள்ள வெங்கடேஸ்வரா காப்பகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோபி போலீசார் குள்ளம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசிய தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கண்காணித்தபோது ஒரு வீட்டிலிருந்து ஆண் ஒருவர் தப்பி ஓடினார். வயதான சண்முகவடிவு என்பவரை விசாரித்ததில் 21வயது பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. சண்முகவடிவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 2 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில் குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 215 மனுக்கள் வரப்பெற்றது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 2 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில் குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 215 மனுக்கள் வரப்பெற்றது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும். இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற பொதுமக்கள் குடிநீர் வசதி,முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உட்பட அடிப்படை வசதிகளை கேட்டு 215 மனுக்கள் கொடுத்தனர்.
ஈரோடு ஆட்சியரக கூட்டரங்கில், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை வகித்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார்.
ஈரோடு ஈ.வி.என். சாலையில் உள்ள ஈரோடு தெற்கு மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 12ஆம் தேதி மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கொடுமுடி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், சோலார், கணபதிபாளையம், அறச்சலுார் , எழுமாத்தூர், மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.