Erode

News June 14, 2024

ஈரோடு மாவட்டத்தில் 213 சாலைகள் சீரமைப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 213 கிராம சாலைகள் மேம்படுத்தும் பணிக்காக எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 181 சாலைகள் மேம்படுத்தும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. 32 சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் 9 சாலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News June 13, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகின்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஜூன்.13) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 13, 2024

பழனி முருகர் கோவிலுக்கு நாட்டு சக்கரை கொள்முதல்

image

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்  கூடத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 15.06.2024 சனிக்கிழமை அன்று நண்பகல் 1.00 மணிக்கு கரும்புச் சர்க்கரை கொள்முதல் செய்ய உள்ளதால் விவசாயிகள் கரும்புச் சர்க்கரையை 15.06.2024 முற்பகல் 11.00 மணிக்குள் கவுந்தப்பாடி விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News June 13, 2024

மண்பாண்ட தொழிலாளர்கள் முதல்வரின் அறிக்கையை வரவேற்று மகிழ்ச்சி

image

அந்தியூர் பாலம் அருகே மண்பானை தொழிலாளர்கள், பொங்கல் பண்டிகை காலங்களில் பொங்கல் வைக்க பயன்படும் மண்பாண்டங்கள் தயாரிக்கவும், கார்த்திகை மாதங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற விளக்கு தயாரிக்கவும் மண் எடுத்து தயாரிப்பதற்கு கடந்த காலங்களில் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் அறிக்கை தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

News June 13, 2024

ஈரோடு: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 21 ஆம் தேதி, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு தொடர்பான விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய எண்ணை 86754 12356, 94990 55942 அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

மாணவிகளுக்கு உதவித்தொகை ஆட்சியர் அறிவிப்பு

image

மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2024 – 25 ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைபெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0424 2261405 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

நாளை மின்தடை அறிவிப்பு

image

பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை( ஜீன்.13) நடைபெற உள்ளதால் ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பிகே புதூர் பணியம்பள்ளி ,  தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூர்,  கவுண்டம்பாளையம், மாடுகட்டி பாளையம், எளையாம்பாளையம், பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 12, 2024

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோருக்கு விருது

image

ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்தவர்களுக்கு அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) விவரங்களை 20ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும், 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

ஈரோடு அந்தோனியார் தேவாலய தேரோட்டம்

image

ஈரோடு சூளையில் அமைந்துள்ள அந்தோனியார் தேவாலய தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பொது மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் .ஜாபர் அலி தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக ஈரோடு திருப்பூர் மண்டல செயலாளர் பெ.சா.சிறுத்தை வள்ளுவன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட பொருளாளர் இமானுவேல் கலந்து கொண்டனர்.

News June 12, 2024

ஈரோடு : 2 மாதத்தில் 1.90 லட்சம் பேர் வருகை

image

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறையால் ஏப்ரல் மாதத்தில் 73,000 பேரும், மே மாதத்தில் 1,17,000 பேரும் வருகை புரிந்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் 1.90 லட்சம் பேர் வருகையால் ரூ.9 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!