India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி வரும் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் அந்தந்த வட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா இன்று தெரிவித்துள்ளார்.
கோவை அஞ்சல் மண்டலத்தின் ஓய்வூதியதாரர்கள் குறைகேட்பு கூட்டம் ஜூலை 3 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. எனவே ஈரோடு கோட்டத்திற்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்கள், மனுக்களை தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் வரும் 20 ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.கோபாலன் தெரிவித்துள்ளார்.
அந்தியூர் புதுக்காடு டாஸ்மாக் கடையில் உள்ள பாரில் ஆறுமுகம் (44) என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 5 மணிக்கு புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைய பாரதி (40) மது அருந்தியுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பீரை ஆறுமுகத்தை குடிக்கச் சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. குடிக்க மறுத்த ஆறுமுகத்தை பீர் பாட்டிலால் மண்டையை உடைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் சுஜில் குட்டை என்னும் இடத்தில் முனியப்பன் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் வெங்கடாசலம் (25) என்பவர் வழக்கம்போல தோட்டத்தில் பூசணிக்காய் பாதுகாப்பிற்காக படுத்து உறங்கினார். இந்நிலையில், அதிகாலை ஒரு மணி அளவில் திடீரென வந்த ஒற்றை யானை அவரை தாக்கி மிதித்ததில் வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பவானி கிளை சார்பில் பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் சுகந்தி தலைமை தாங்கினார். செயலாளர் பச்சாயி, அறிவுமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட இணைச் செயலாளர் கொடிமலர் சிறப்புரை ஆற்றினார். சத்துணவு திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கூறினர்.
உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கு.ஜவகர் இ.கா.ப., கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
தாளவாடி அருகே திகனாரை கடுக்காய்மரம் பிரிவு பகுதியில் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் காட்டு யானைகள் தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தையும் , டிரான்ஸ்பார்மர் கம்பத்தையும் உடைத்து சேதம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில், முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மொத்தம் 213 கிராம சாலைகள் மேம்படுத்தும் பணிக்காக எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 181 சாலைகள் மேம்படுத்தும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. 32 சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் 9 சாலைகளில் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Sorry, no posts matched your criteria.