India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவகி என்பவர், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பேராத்ரோபால் போட்டியில் பங்கேற்க உள்ளார். எனவே அவருக்கு அறம் அறக்கட்டளை சார்பாக, போட்டியில் பங்கேற்கும் செலவினத் தொகையில் ஒரு பங்காக ரூ.10,000/ மொடக்குறிச்சி பா.ஜ.க., எம்.எல்.ஏ., சரஸ்வதி வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி தேர்வு நிலை பேரூராட்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இன்று உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெறும் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வுக்கு ஜூலை 8 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் இன்று (ஜூன்.19) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில் கொடுமுடி வட்டத்தில் 2 நாட்கள் மாவட்ட ஆட்சியர் தங்கி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் இன்று மாலை கொடுமுடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
கோபி வட்டம், பெருமுகை கிராமத்தில் சஞ்சீவீராயன் குளம் உள்ளது. இக்குளத்திற்கு வடக்கே ஒரு தோட்டத்தில் முறைகேடாக மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் இன்று (ஜீன்.18) காலை 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தது.
இது குறித்து வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறை மூலம், அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள புதிய வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு மாவட்ட மக்கள் TNDIPR, Govt. of Tamil Nadu என்ற வாட்ஸ்அப் சேனலில் இணைந்து அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர்
சுர்ஜித். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கார்த்திக் ராஜா, சுர்ஜித், அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் பவானி காவிரி ஆற்றில் சேலம் – கோவை பைபாஸ் பாலத்திற்கு அடியில் காவிரி ஆற்றின் மேற்புற கரை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுர்ஜித் திடீரென சுழலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மொடக்குறிச்சி,ஈரோடு, பவானி, நம்பியூர் மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களில் நடப்பாண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கி தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவானியை சேர்ந்த சேது மணிகண்டன் என்ற இளைஞர் தனது முன்னாள் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற முயன்றுள்ளார். போன் செய்தும் அப்பெண் எடுக்காததால், அவரது 2வது காதலனிடம் அதனைக் கூறி, அவனது செல்போனிலிருந்து பேச வேண்டும் என அவர். கூறியுள்ளார். இந்நிலையில், முன்னாள் காதலியின் 2வது காதலன் சேதுமணிகண்டனை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை அமைந்துள்ளது ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஈரோடு மாவட்டம் திருப்பூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அணையில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.
Sorry, no posts matched your criteria.