Erode

News June 21, 2024

ஈரோடு: 9 காவலர்கள் பணியிட மாற்றம்

image

பவானி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனிப்பிரிவு காவலர்கள் மற்றும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் கோரி விண்ணப்பத்த நிலையில், 9 பேரை இடமாற்றம் செய்து ஈரோடு எஸ்.பி. உத்தரவிட்டார்.

News June 21, 2024

ஈரோடு: குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்

image

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டி பணி நடைபெற்று வருகிறது. இந்நிலைியில், அம்மன் நகர், சருகு மாரியம்மன் கோவில், காந்திநகர் ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. மழைநீர் ஒதுங்க ஓடை கால்வாய் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். 

News June 20, 2024

ஈரோடு : சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு

image

ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில், தற்காலிக அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப பணியாளர் மற்றும் வழக்கு பணியாளர் என 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பம் உள்ள நபர்கள் <>https://erode.nic.in/<<>> என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் ஜூன்.28-க்குள், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட சமூக நல மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 20, 2024

கள்ளச்சாரயம் குறித்த புகார் அளிக்க தொலைப்பேசி எண்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விஷச்சாராயம் அருந்தியதில் 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குறித்த புகார் அளிக்க, 10581 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

News June 20, 2024

ஈரோடு: கலைஞரின் கனவு இல்லம் அறிவிப்பு

image

ஊரகப் பகுதிகளில் உள்ள குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தர “கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் அமைத்து தரப்படவுள்ளன. பட்டா வைத்திருப்பவர்கள் ரூ.3.50 லட்சம் செலவில் வீடுகள் கட்டிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

ஈரோடு மாநகர் சுற்றுவட்டாரத்தில் மழை

image

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 3 மணியளவில் வழக்கத்தை விட காற்று வேகமாக வீசியது. தொடர்ந்து, 3:30 மணி முதல் ஈரோடு அடுத்த மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் தூரல் மழை பெய்தது. இதனால் ஈரோடு மாநகர் சுற்றுவட்டாரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

News June 20, 2024

ஈரோடு: போலி ஆதார் கார்டு – 9 பேர் கைது

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து சட்டவிரோதமாக 10 ஆண்டுகள் தங்கியிருந்தது அம்பலமானது. அனருல் இஸ்லாம், ஹலால், சாகினூர், மோனூர் காஜி, ஆயுப் சல்மான்ஷா, மொனிரா, மகமுதா, மிஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

News June 20, 2024

ஈரோடு: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஜூன் 21), தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்ட இளைஞர்கள் தனியார்துறை வேலைவாய்ப்பு தொடர்பான தகவலுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய எண்ணை 86754 12356, 94990 55942 அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

அந்தியூர்: தனியார் பேருந்துகள் மோதி விபத்து

image

பவானி லட்சுமி நகரில் ஈரோடு சென்ற இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றை ஒன்று போட்டி போட்டு முந்தி சென்றதில் 2 பேருந்துகளும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பினர். அதனால்,  அங்கு சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி, ஒட்டுநர்களை கண்டித்தனர். 

News June 19, 2024

ஈரோடு: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

ஈரோடு, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஜூன் 26ம் தேதி பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாக்களுக்கு கோட்ட அளவிலா விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார் தலைமை வகிக்கிறார். இதில் விவசாய நிலங்களை நில அளவீடு செய்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட விவசாயம் தொடர்பான கோரிக்கை மனு அளித்து தீர்வு பெறலாம் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!