India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு எஸ்.கே.சி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான வங்கி கணக்கு தொடங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் எஸ்பிஐ, ஜிஎச் வங்கி கிளையின் மேலாளர் புவனேஸ்வரி பங்கேற்று வங்கி கணக்கு தொடங்குவதற்கான படிவங்களை வழங்கினார். இந்த முகாமில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வங்கி கணக்கு துவங்க ஏற்பாடு செய்துள்ளதாக தலைமை ஆசிரியர் சுமதி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேர்வராயன் பாளையம் உள்ள நீர் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் சாயக் கழிவுநீர், நேரடியாக சென்று பவானி ஆற்றில் கலந்து வருவதால் நீர் மாசுபடுகிறது. இதனால், பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றனர். பவானி ஆற்றில் நேரடியாக கலக்கும் சாயக்கழிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் இன்று 3வது நாளாக ஜமாபந்தி ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அதிகாரி ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில், பர்கூர் உள் வட்டத்திற்குட்பட்ட 33 மலை கிராம மக்கள் மற்றும் அத்தாணி, கீழ்வாணி, மூங்கில் பட்டி, நகலூர், கூத்தம்பூண்டி கிராம பகுதி மக்கள் கலந்து கொண்டு வீட்டு பட்டா மாறுதல் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட பகுதிகளில் மனித உயிரை கொல்லும் கஞ்சா, சாராயம், ஸ்பிரிட் மற்றும் அந்நிய மதுபானங்கள் விற்பனை நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல்களை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கட்டுப்பாட்டு வாட்ஸ்அப்
94429-00373 எண்ணிலும் தெரிவிக்கலாம். தகவல் தருபவர் பற்றிய ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கி மற்றும் அவுட் காய் வைத்திருந்ததாக சத்தி, புதுக்குய்யனூர், டேங் வீதியைச் சேர்ந்த துரை (எ) சின்னதுரை (25) என்பவரை பவானிசாகர் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து 8 அவுட் காய், ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் முன்னிலை வகித்தார். இதில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாஜலம் சட்டமன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்துதுறை மானிய கோரிக்கையில், “அந்தியூர் பகுதிக்கு பகுதிநேர மோட்டார் வாகன அலுவலகம் அமைத்து தர வேண்டும். மலைக்கிராம மக்களுக்கு மினி பேருந்து இயக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
ஈரோடு, சென்னிமலை பேரூராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னிமலை அருகே அம்மாபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து வரும் மெயின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சென்னிமலை பேருராட்சி பகுதியில் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாது என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஜூன் 23 ஆம் தேதி ஈரோடு, சேலம், தருமபுரி உட்பட 6 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.