India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்,
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://forms.gle/VTRWijWVcgNBn57w5 என்ற லிங்கில் பதிவு செய்து, ஆவணங்களுடன் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு, ஜூலை 2ம் தேதி நேரில் வர வேண்டும் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் கீழ் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. தையல் பயிற்சி பெற்றவர்கள் சான்றுடன் இ-சேவை மைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் (அ) மகளிர் ஊர் நல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சித்தோடு அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் நாளை (ஜூன் 27) மாவட்ட அளவிலான பி.எப். விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் (நிதி ஆப்கே நிகட்) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சந்தாதாரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மண்டல ஆணையாளர் வீரேஷ் தெரிவித்துள்ளார்.
சித்தோடு அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் (ஜூன்.27) மாவட்ட அளவிலான பி.எப். விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் (நிதி ஆப்கே நிகட்) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சந்தாதாரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மண்டல ஆணையாளர் வீரேஷ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரகாஷ், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக மாட்டுச்சந்தை, குதிரை சந்தையுடன் தேர் திருவிழா நடைபெறும். நடப்பு ஆண்டு ஆடி பெருந்தேர் திருவிழா, வரும் ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பொது சேவை, கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளில் சாதனை மற்றும் சேவை புரிந்தவர்களுக்கு 2025ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 30ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பெருந்துறை இந்திராநகர் காலனியை சேர்ந்த கருப்புசாமி -தமிழ்ச்செல்வன் ஆகிய இருவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில், தமிழ்ச்செல்வன் கருப்புசாமியை கத்தியால் மார்பு, தலையில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கருப்புசாமி சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மொடக்குறிச்சியை அடுத்த சின்னம்மாபுரத்தில் முன்னாள் மத்திய, மாநில அமைச்சராக பதவி வகித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களின் தோட்டத்து வீடு உள்ளது. இந்நிலையில், இன்று (ஜூன் 24) காலை பணிக்கு வந்த தோட்ட வேலையாட்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மனு அளித்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
Sorry, no posts matched your criteria.