Erode

News November 17, 2024

ஈரோட்டில் தலை துண்டாகி ஒருவர் பலி

image

ஈரோடு ரயில் நிலையம் நடைமேடை 1இல் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் அறைக்கு அருகில் தலை துண்டாகி ஒருவர் சடலமாக கிடந்தார். ரயில் நிலையம் மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் ரயில்வே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு வயது 60 இருக்கும். அவர் நீல நிற ஆடை அணிந்திருந்தார். ரயிலில் அடிபட்டு இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

News November 17, 2024

தாளவாடி அருகே 390 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

தாளவாடி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது 3 இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி வாங்கி கர்நாடக மாநிலத்துக்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் கலீம் ஷெரிஃப், ஆரிப் கான், முஜீப் அகமது என்பவர்களிடமிருந்து 390 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 16, 2024

ஈரோடு: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு ➤பவானி: இறந்தவர் உடலுடன் சாலை மறியல் ➤விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதிமாற்றம் ➤காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது ➤வாக்காளர் சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு ➤ஈரோட்டில் இடியுடன் கூடிய கனமழை ➤நள்ளிரவில் ஆம்புலன்ஸில் பிரசவம் ➤ஈரோட்டில் பூண்டு விலை ஏற்றம் ➤மாவட்டத்தில் பரவலாக பனிப்பொழிவு.

News November 16, 2024

ஈரோடு: அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கு உதவியவர்களுக்கு ஆண்டு தோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான விருது 2025 திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியான நபர்கள், ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நவம்பர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 16, 2024

பவானி: இறந்தவர் உடலுடன் சாலை மறியல் 

image

பவானி அருகே ஒரிச்சேரி புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பாயி என்பவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது உடலை அடக்கம் செய்வதற்காக ஒரிச்சேரி பவானி ஆற்றங்கரை ஓரம் கொண்டு சென்றனர். அங்கு மயான ஆக்கிரமிப்பு இருந்தது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் ஒரிச்சேரி புதூர் மயானம் செல்லும் சாலையில் இன்று இறந்தவர் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பவானி டிஎஸ்பி சந்திரசேகர் விசாரணை செய்துவருகிறார்.

News November 16, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி மாற்றம்

image

ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், நவம்பர் 20ஆம் தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆர்.டி.ஓ., ரவி தலைமை வகிக்கிறார். இந்நிலையில், நிர்வாக காரணத்தால், நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 16, 2024

வாக்காளர் சிறப்பு முகாம் ஆட்சியர் ஆய்வு

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிய வாக்காளர் பதிவு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில், மொடக்குறிச்சி வட்டம், லக்காபுரம், கணபதிபாளையம் மற்றும் சாமிநாதபுரம்புதூர் பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமினை ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News November 16, 2024

பவானி கூடுதுறையில் கூடிய ஐயப்ப பக்தர்கள்

image

இன்று கார்த்திகை முதல் நாள் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் வெளியூரிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பா ஐயப்பா என்று சரண கோஷமிட்டபடி பவானி மூன்று நதிகள் கூடும் கூடுதுறையில் குளித்துவிட்டு விநாயகர் முருகர் சிவன் துர்க்கை அம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டு அவரவர் வண்டிகளுக்கு ஐயப்பா ஐயப்பா என்று கோஷமிட்டபடி பூஜை செய்து சென்றனர். இதனால் பவானி கூடுதுறை களைகட்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News November 16, 2024

ஈரோடு: நள்ளிரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்

image

அந்தியூர் தாலுகா, எலச்சிபாளையம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதையன், இவரது மனைவி சின்னமாதி (20). இவரை பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கூட்டி வரும்போது பிரசவ வலி அதிகமானதால், எருமை குட்டை என்ற வனப்பகுதியில் (பர்கூர் அருகில்) இன்று அதிகாலை 2 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

News November 15, 2024

ஈரோடு விசிக நிர்வாக மறுசீரமைப்பு குழு நியமனம்

image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாக மறுசீரமைப்பு – 2024 ஒருங்கிணைப்புக் குழுவினை தொகுதி வாரியாக நியமித்து, அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு – அர.அப்துர்ரஹ்மான், ஈரோடு மேற்கு – கி.கிள்ளிவளவன், மொடக்குறிச்சி – அ.வசந்த், பெருந்துறை – வீர.ஆதித்தியன், பவானி – தனலட்சுமி, கோபி – சுசி.கலையரசன், பவானிசாகர், அந்தியூர் – ஆல்டிரின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.