India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக மண் மற்றும் வண்டல் மண்ணை எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் இணைய வழியில் அனுமதி வழங்குவார்கள் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான வாட்டர் போலோ நீச்சல் போட்டி, சென்னை வேளச்சேரியில் நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய, 13 வீராங்கனையர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஈரோடு கருங்கல்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அல்பியாகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும், 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கும் தேசிய வாட்டர் போலோ போட்டியில் தமிழக அணி பங்கேற்கவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சொந்த கட்டங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தேவாலயங்களின் வயதிற்கேட்ப ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை மானியத்தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உதவித்தொகையை பெற மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 24-25ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ளோர் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் ஜூலை 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9443941443, 9842759545 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில், சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஜ்புத் தகர் என்ற இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு அசோக்நகர் பகுதியில் உள்ள சர்புதீன் என்பவர் வீடு மற்றும் எஸ்.கே.சி சாலை அருகே முகமது ஈசாக் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை 4 இல் இருந்து 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் கிராம ஊராட்சிகளில் வருகின்ற ஜூன்.30 இல் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில், தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (ஜூன்.28) ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை தாலுகா விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கி தங்கள் பகுதி குறைகள் குறித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் குறைதீர் கூட்டம் நாளை (28) காலை 10:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற உள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் காலை 10:00 முதல் 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 முதல் மதியம் 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்னைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அந்தியூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வெங்கடாசலம் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, மற்ற துறை அமைச்சர்களையும் நேரில் சந்தித்து மனுக்கள் வழங்கினார். மேலும், அந்தியூர் தொகுதிக்கு நலத்திட்ட உதவிகளை செய்திட வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.