India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறும் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வுக்கு ஜூலை 8 முதல் (நேற்று) ஜூலை 28ஆம் தேதிவரை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு 03.07.2004 முதல் 03.01.2008 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காவிலும், ஜூலை 13ஆம் தேதி பொது விநியோக திட்ட குறைதீர் நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் ஆதாரில் செல்போன் எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன் பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா இன்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஈரோடு, பெருந்துறை, கோபி, பவானி, அந்தியூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுதிறனாளிகள் பங்கேற்றனர். நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குடும்ப சூழல், உடல்நிலை, காவல் நிலையத்தில் உள்ள சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கள் பணியிடத்தை மாற்றி உத்தரவிடுமாறு கடந்த மார்ச் முதல் எஸ்பியிடம் விண்ணப்பித்துவருகின்றனர். எம்பி தேர்தல் நடத்தை விதி வாபஸான நிலையிலும் இடமாற்றம் செய்யப்படவில்லை. இடமாற்ற உத்தரவை விரைந்து வழங்குமாறு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 214 கிராம ஊராட்சிகளுக்கு ‘மக்களுடன் முதல்வர் திட்டம்’ ஜூலை 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை 72 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. எனவே கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை தகுந்த ஆவணங்களுடன், தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தேசிய தூய்மைப்பணியாளர்கள் ஆணையத்தலைவர் வெங்கடேசன் நேற்று ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மரப்பாலம், ஜீவானந்தம் சாலையில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று கோரிக்கையினை கேட்டறிந்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அளித்த மனுக்களை பெற்று கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்ட பகுதிகளில் மனித உயிரை கொல்லும் கஞ்சா, சாராயம், ஸ்பிரிட் மற்றும் அந்நிய மதுபானங்கள் விற்பனை நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல்களை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கட்டுப்பாட்டு வாட்ஸ்அப் (94429-00373) எண்ணிலும் தெரிவிக்கலாம். தகவல் தருவோர் பற்றிய ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன் மற்றும் குழு கடன் ரூ.15 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில், ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்டு 2 முதல் 13 வரை நடைபெற உள்ளது. இவ்விழா ஈரோடு – சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நூற்றுக்கணக்கான அரங்குகளுடன், பல சிறப்பம்சங்கள் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25ஆம் ஆண்டு விழா மற்றும் ஈரோடு புத்தகத் திருவிழாவின் 20 ஆம் ஆண்டு விழா மிக சிறப்பாக நடத்தப்பட உள்ளது என அறிவக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இரவு 8.30 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.