India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்ற இளங்கலை மருத்துவ மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு விழாவானது இன்று(ஜூலை 12) கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூலை 12) காலை 7 மணி அளவில் தூரல் மழை பெய்தது. ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் 10 நிமிடம் தூரல் மழை பெய்தது. மேலும் நம்பியூர், கோபி, பவானி, அந்தியூர், தாளவாடி சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று இரவு வரை ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, காசிபாளையம் அரசு ஐடிஐ வளாகத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐடிஐகளில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கும் பொருட்டு, பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் ஜூலை 15ஆம் தேதி நடக்க உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்கலாம் என ஈரோடு அரசு ஐடிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து 2024-25 ஆண்டு முதல் போக பாசனத்திற்கு அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் மூலம் 24 ஆயிரத்து 54 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் ஜூலை 12ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.
வெள்ளோட்டில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.
ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்திற்குள் பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வு நடந்தது. 444 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நேற்று பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது; இன்றும் கலந்தாய்வு நடக்கிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு நாளை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் இன்று (ஜூலை 10) மாவட்ட உயர் மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு, துணை இயக்குநர் குலால் யோகேஷ் விலாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு சுதந்திர தின விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சரால் கல்பனா சாவ்லா விருது 2024 வழங்கப்படவுள்ளது. எனவே தகுதி வாய்ந்த நபர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு
மாவட்ட சமூகநல அலுவலக எண் 0424-2261405ஐ தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 214 கிராம ஊராட்சிகளுக்கு ‘மக்களுடன் முதல்வர் திட்டம்’ நாளை (ஜூலை 11) தொடங்குகிறது. இந்நிலையில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரவலசு, முகாசிபுலவன்பாளையம், புங்கம்பாடி, குட்டப்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில், இத்திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைக்க உள்ளார் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.