India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2024-2025ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நாளை (ஜூலை 15) முதல், 5 பாட பிரிவுகளுக்கு (பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல்) நேரடியாக நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து விண்ணப்பம் பெற்று முதலாம் ஆண்டில் சேர்ந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் ப.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் ஈரோடு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 11 தீயணைப்பு நிலையங்களில் அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையினரோடு இணைந்து செயலாற்றுவது குறித்து பயிற்சி நேற்று வழங்கப்பட்டது. இந்நிலையில், பெருந்துறை தீயணைப்பு துறையினர் அப்பகுதி தன்னார்வலர்களுக்கு வெள்ளம், பெரும் தீ விபத்து, சாலை விபத்து, வனத்தீ உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவில் இன்று பவானி நகர செயலாளர் வழிகாட்டுதலின்படி திமுகவினர் கலந்துகொண்டு சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திமுக முன்னிலை பெற்று வருகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஈரோடு மாவட்டம் பவானி நகர திமுக சார்பில் பவானி அந்தியூர் பிரிவில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் காலை 9 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்குள் வருகை தருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு கூடங்களில் தேர்வு பணியில் தனிப்படைகள், கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காவிலும் , நாளை (ஜூலை 13) பொது விநியோக திட்ட குறைதீர்நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் ஆதாரில் செல்போன் எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன் பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் கலந்து கொண்டு பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உதவித்தொகை பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.