Erode

News July 16, 2024

ஈரோட்டில் தனியார் துறையில் இலவச வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிகாட்டும் மையத்தில் ஜூலை 19ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் ராஜகோபால் சுன்காரா அறிவித்துள்ளார்.

News July 15, 2024

காவலர்களுக்கு ஆயுதப் பயிற்சி

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் உத்தரவு படி ஆயுதப் பயிற்சி மற்றும் அதனை கையாளும் முறை குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஈரோடு-ஆனைக்கல்பாளையத்தில் உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர், காவலர்களுக்கு ஆயுதப்பயிற்சி குறித்த வகுப்பை மேற்கொண்டார்.

News July 15, 2024

மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பவானி, கோபி உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் நிலவும் குடிநீர், சாலை, கழிவறை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News July 15, 2024

ஈரோடு: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஜூலை 19ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

எல்லையில் டெங்கு பரவலை தடுக்க சோதனை

image

கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக கர்நாடக எல்லையான கர்கேகண்டி, அந்தியூர், வரட்டுபள்ளம் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்திகிருஷ்ணன் தலைமையில் மருத்துவக் குழுவினர் தீவிர மருத்துவ சோதனைக்கு பிறகு தமிழகத்திற்குள் அனுப்புகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

News July 15, 2024

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்

image

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரகப் பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் எலவமலை பஞ்சாயத்துக்குட்பட்ட விருமாண்டபாளையத்தில் இன்று வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி, குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். இதில் எம்பி அந்தியூர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உட்பட பலர் பங்கேற்றனர்.

News July 15, 2024

காமராஜர் பிறந்தநாள்: ஈரோட்டில் அமைச்சர் மரியாதை

image

காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்ட திமு கழகத்தின் சார்பாக நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாடினர். ராஜ்யசபா எம்பி அந்தியூர் ப.செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

சத்தி அரசு கலை கல்லூரியில் நேரடி சேர்க்கை

image

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இன்று (ஜூலை 15) முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 2024-25ம் கல்வியாண்டில் இணையவழியில் மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் இணைய வழியில் விண்ணப்பிக்க தவறியவர்கள் இன்று முதல் கல்லூரியில் சான்றிதழ்களை சமர்ப்பித்து, முதலாமாண்டு படிப்பில் சேரலாம் என கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

கேரளா மகளிர் அணி முதலிடம்

image

ஈரோடு அடுத்த திண்டல் அருகே உள்ள சக்தி நகரில் அகில இந்திய ஆடவர் மற்றும் மகளிருக்கான கைப்பந்து விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. இறுதி போட்டியில் கேரளா மகளிர் அணி முதலிடத்தை தட்டி சென்றது. பரிசினை ஈரோடு முதன்மை ஆய்வாளர் ஜி.ஜவகர் வீராங்கனைகளிடம் வழங்கினார். ஆடவருக்கான போட்டிகள் நிறைவடையவில்லை.

News July 14, 2024

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஈங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சைலேந்திர குமார். இவரது மனைவியான கார்கில் குமாரிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது கணவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஏற்றிக்கொண்டு பெருந்துறையில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

error: Content is protected !!