Erode

News July 17, 2024

இன்று இரவு ரோந்து காவலர்களின் நிலவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு – 9498172088, பவானி – 9025330446, கோபி – 9585376421, சத்தி – 9498178300, பெருந்துறை – 9498168355. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News July 17, 2024

ஹாக்கிப் போட்டியில் மகளிர் பள்ளி சாதனை

image

சென்னையில் எஸ்ஆர்எம் கோப்பைக் காண ஹாக்கி போட்டி எஸ்ஆர்எம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 4/3 என்ற கணக்கில் வேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியை வென்று கோப்பையை கைப்பற்றியது. புளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த சபீனா போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <>ஆன்லைனில் <<>>வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு<> HRCE<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

image

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. எனவே உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் உயிருடன் உள்ளதை உறுதிப்படுத்த வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். தங்கள் பகுதி விஏஓவிடம் உரிய சான்று பெற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

ஈரோடு மாவட்டத்தில் வலம் வரும் ஆப்பிள் மேப் வாகனம்

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக ஆப்பிள் நிறுவனத்தினர் நவீன வரைபட அடையாளப்படுத்தும் (மேப் அப்டேட்) கருவியை காரில் பொருத்தி வீதி வீதியாக வலம் வருகிறது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனுமதி பெற்ற இந்த வாகனங்கள் ஈரோடு மாநகரம், பவானி, கோபி என்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 7 வாகனங்கள் வலம் வருகின்றது. இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் – சென்னிமலை, வெள்ளோடு ஆகிய பகுதிகளில் வலம் வந்தது.

News July 17, 2024

ஈரோட்டில் அதிகாலையிலேயே தொடங்கிய மழை

image

ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூலை 17) அதிகாலை முதலே தூரல் மழை பெய்து வருகிறது. ஈரோடு அடுத்த மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் தற்போது தூரல் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அடுத்த 2 நாட்கள் வரை ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 16, 2024

ஈரோடு மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

image

ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இருந்துவரும் லக்ஷ்மி பாவ்யா தன்னீரு நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) / திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியாக இருந்துவரும் நாரணவ்ரே மனிஷ் சங்கரராவ் ஐஏஎஸ் ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News July 16, 2024

அந்தியூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம்

image

ஈரோடு மாவட்டம், அந்தியூர் – அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதனை அந்தியூர் தொகுதி எம்எல்ஏ வெங்கடாசலம் இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

error: Content is protected !!