India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 19,533 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், தற்போது அணைக்கு வினாடிக்கு 16,612 அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 78.28 அடியாக உள்ளது.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும்
@dreamzonecbe இணைந்து நடத்தும் கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் நடைபெற்றது. இதில் 107 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று தேவர் மலையிலிருந்து தாமரை கரை செல்லும் சாலையில் நேற்று சுற்றித் திரிந்தது. அவ்வழியே சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி ஆபத்தை உணராமல் யானை அருகே சென்று செல்பி எடுத்தனர். தகவலின்பேரில் விரைந்துவந்த வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டிவிட்டு செல்பி எடுத்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் 219வது நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்துக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், அரச்சலூர் நல்லமங்காபாளையத்தில் பொல்லானுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1.82 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று கூறினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் 219 ஆவது நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவ படத்துக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், அரச்சலூர் நல்லமங்கா பாளையத்தில் பொல்லானுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1.82 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது.
அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளராக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட காசிபாளையம் பேரூராட்சியை சேர்ந்த கே. எஸ். கோதண்டன் நியமிக்கபட்டுள்ளார். தொடர்ந்து இவர் இனிமேல் அனைத்து தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரசின் சார்பாக பங்கேற்பார் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக பல்வேறு நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் புதிய 15 பேருந்துகளை இன்று அமைச்சர்கள் முத்துச்சாமி மற்றும் சிவசங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்கள் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.