India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் இன்று(ஜூலை 19) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வங்கியாளர்கள் கல்விக் கடன் வழங்குவது தொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கி அளவில் மேலாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் துறை சார்ந்த அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
தமிழ்நாட்டில் நடப்பாண்டு மாநில அரசு சார்பில், நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை பள்ளியில் 5 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலை பள்ளியில் 5 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிக்கு 1 ஆசிரியர் என 11 நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. எமிஸ் தளத்தில் ஆசிரியர்கள் ஜூலை 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு தாலுகாவில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வண்ணாங்காட்டு வலசு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா இன்று காலை ஆய்வு செய்தார். பின் ஈரோடு மாநகராட்சி தெருக்களில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இன்று காலை சத்தி உட்கோட்ட காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பங்களாபுதூர், புளியம்பட்டி, தாளவாடி, கடம்பூர், பவானிசாகர் உள்ளிட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்பட 44 நபர்களுக்கு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 9 மணி அளவில் ஆறு ஆய்வாளர்கள் மற்றும் 38 உதவி ஆய்வாளர்களுக்கு கையாளும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் சாலையோர மரத்தின் மீது பைக் மோதி இன்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு தலைமைக் காவலர் குமார் (47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தேனி மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று (ஜூலை 19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அருகே சித்தோட்டில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி நேற்று நடைபெற்றது. இந்தியன் வில், ரிகர்வு வில், காம்பவுண்ட் வில் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு ஈரோடு எம்பி பிரகாஷ், அரசு வக்கீல் திருமலை ஆகியோர் சான்றிதழ், பதக்கங்களை வழங்கினர்.
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாகவுள்ளது. பல்வேறு நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
அரசின் சேவைகள் விரைவாக மக்களுக்கு சென்று சேரும் வகையில் நாளை (19.07.2024) ஈரோடு மாவட்டத்தில் ஊரக பகுதியில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உடனடி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது
Sorry, no posts matched your criteria.