India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணகுமார் குடும்பத்தினர் திருச்செந்தூர் சென்று விட்டு இன்று மீண்டும் வீடு திரும்பியபோது கரூர் அடுத்த ஆண்டிக்கோட்டை பகுதியில் சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிருஷ்ணகுமார், அவரது மாமியார் இந்திராணி மற்றும் அவரது 10 வயது மகள் வருணா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஈஈரோட்டில் ஈரோடு அரண் ஸ்போர்ட்ஸ் சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி (12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளில்) நேற்று நடந்தது. இதை ஈரோடு கே.இ.பிரகாஷ் எம்பி, ஈரோடு லயன்ஸ் கிளப் ஆர்.கல்யாணசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 60-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
ஈரோடு புத்தகத் திருவிழா, மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியில் ஆக.2ஆம் தேதி தொடங்குகிறது. இதில் தமிழகத்தில் சிறந்த அறிவியலாளர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் பரிசுடன் ஜிடி நாயுடு விருது வழங்கப்படுகிறது. ஜூலை 30ஆம் தேதிக்குள் ஆய்வு குறிப்புகள் மற்றும் ஆய்வு ஆவணங்களை info@makkalsinthanaiperavai.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
திருமணமான பெண்களுக்கு வழங்கப்படும் 12 இலக்கம் கொண்ட நிரந்தர கர்ப்பபதிவு எண்ணை இணையதளத்தில் தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து சுயமாக பெற்றுக் கொள்ளலாம். தேவையான விவரங்களுடன் https://picme.tn.gov.in என்ற இணையதளத்தில் சுய கர்ப்ப பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 76 அரசு ஆரம்ப சுகாதார நிலைய சிறப்பு முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 10.3 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மழை பொழிவு காரணமாக பவானிசாகர் அணையில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 82. 11அடியிலிருந்து 83.42 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12,239 அடியிலிருந்து 6,719 அடியாக குறைந்துள்ளது. வினாடிக்கு 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளரை இன்று சந்தித்தார்.அச்சந்திப்பில் , ஈரோட்டில் இருந்து தினசரி இரவு புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் வண்டி புறப்படும் நேரம் பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் இரவு 9 மணிக்கு பதிலாக 10 மணிக்கு புறப்படும் வகையில் இயக்கினால் சென்னை சென்ட்ரல் சென்றடையும் நேரம் பயணிகளுக்கு வசதியாக அமையும் என்பதை தெரிவித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை (சிவில் சப்ளை சிஐடி) டிஎஸ்பியாக இருந்துவரும் சுரேஷ் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட மணிமங்கலம் சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக இருந்துவரும் ராஜபாண்டியனை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். இவர் ஈரோடு சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாக விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.
நாளை இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கோவில் சொத்துகளை பாதுகாக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் மேலப்பாளையத்தில் நாளை காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி அறிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவுத்திருவிழா, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் இன்று ( ஜூலை20) காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது. இதில் பாரம்பரிய விதைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த உணவுத் திருவிழாவை காண ஏராளமானோர் வருகைதர உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.