Erode

News July 23, 2024

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி

image

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நடப்பு ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே 17 வயது பூர்த்தி அடைந்த பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ஆம் வகுப்பு முடித்து டிப்ளமோ படித்தவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் www.tncuicm.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற, கூட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை அடங்கிய மனுக்களை ஆட்சியர் பெற்று கொண்டார். இதில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.

News July 23, 2024

பட்ஜெட்: ஈரோடு மக்களின் எதிர்பார்ப்பு

image

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையி்ல ஈரோட்டில் மத்திய மஞ்சள் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்பது ஈரோடு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட வேண்டும், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் அறிவிப்பு வெளியாகும் என ஈரோடு மக்கள் எதிர்பார்த்துள்ளனர். பட்ஜெட் குறித்து உங்கள் கருத்து என்ன?

News July 23, 2024

தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் ஜூலை 26 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 86754 12356, 94990 55942 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்ச்செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வுசெய்து வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.25,000, சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை <>www.tamilvalarchithurai.tn.gov.in<<>> என்ற இணையளத்தில் பதிவிறக்கி, பூர்த்திசெய்து கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆக.9 கடைசி நாள் ஆகும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 23, 2024

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஜூலை 22) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.

News July 22, 2024

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்

image

ஈரோடு உதவி கல்வி அலுவலர் அலுவலகத்தில், தொடக்க கல்வி இயக்ககம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதேபோல், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு, நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வருவாய் மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

News July 22, 2024

பேச்சுப் போட்டிக்கு உடனே விண்ணப்பிக்கவும்

image

கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் 3 நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் முறையே பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.

News July 22, 2024

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நாளை (23-07-2024) காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளுக்கான உடனடி தீர்வுகளை பெறலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா இன்று தெரிவித்துள்ளார்.

News July 22, 2024

ஈரோடு மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

பெருந்துறை அடுத்த சிப்காட் துணை மின் நிலையத்தில், நாளை (ஜூலை 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழ்க்காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டல வளாகம், சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், மேக்கூர், கோட்டைமேடு, பெருந்துறை மேற்கு, சின்னமடத்துப்பாளையம், துடுப்பதி, பள்ளக்காட்டூர், சிலேட்டர்புரம்.

error: Content is protected !!