India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 44,228 கிராமின் தாக் சேவாக் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர் – 31, அசிஸ்டன்ட் கிளை மாஸ்டர் – 50, தாக் சேவாக் -17 என 98 காலியிடங்கள் உள்ளன. தகுதியானோர் இங்கு <
ஈரோடு, பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோவிலில் 2007ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் விரும்பிய நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்த குத்தியாலத்தூர் ஊராட்சி மல்லியன்துர்க்கம் கிராமத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். இதில் நடுநிலை பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு மதிய உணவு குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அதே பகுதியில் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதில் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையமாக கடந்த 2022 ஆண்டு மலையம்பாளையம் காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான கோப்பை வழங்கப்பட்டது. இந்நிலையில், கோப்பையை இன்று (24.07.2024) ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகரிடம், மலையம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திருஞானசம்பந்தம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகிக்க உள்ளார். ஈரோடு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு, மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட அவல்பூந்துறை ராசாயம்மாள் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் முகாம் இன்று நடைபெற்றது. இதில் பொது மக்களின் மனுக்களை மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சரஸ்வதி நேரடியாக பெற்றுக் கொண்டார். இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரியில், ஜூலை 29ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று தங்கள் குறைகளுக்கு தீர்வு பெறலாம் என ஈரோடு மண்டல வைப்பு நிதி ஆணையர் வீரேஷ், செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி துணைமின் நிலையத்தில் நாளை (ஜூலை 25) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே கொடுமுடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரோஜா நகர், எஸ்.என்.பி.நகர், காங்கேயம் ரோடு, எம்.ஜி.ஆர்.நகர், ஆச்சியம்மன் கோவில் பகுதி மற்றும் எமகண்டனூர் ஆகிய
பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் கடுகு, எள், சூரியகாந்தி பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையும், குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதலும் செய்யப்படும் என்பது சிறந்தது. டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி கணக்கீடு அறிவிப்பை வரவேற்கலாம். இயற்கை விவசாயத்துக்கு, 1 கோடி பேருக்கு பயிற்சி செயல்முறைப்படுத்த வசதி ஏற்படுத்தப்படும் என கொடிவேரி அணை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி தளபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில், மதி சிறகுகள் தொழில் மையத்தில், ஒரு ஒப்பந்த நிறுவன மேம்பாட்டு அலுவலர் ரூ.25,000 ஊதியத்தில் நியமிக்கப்பட உள்ளார். விருப்பமுள்ளவர்கள் சுய விவரத்தை erd.tnrtp@yahoo.com என்ற மின்னஞ்சல் (அ) மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், 5 பாரதிதாசன் தெரு, டீச்சர்ஸ் காலனி, ஈரோடு என்ற முகவரியில் ஜூலை 25க்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.