India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு, சித்தோடு அடுத்துள்ள அரசு போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடிநீர் தொட்டியினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி ஆகிய இரு இடங்களில், மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றும் போலீசாருக்கு ஓராண்டு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். இதன்படி மதுவிலக்கு பிரிவில் பணியாற்ற, பிற போலீசாரிடம் விருப்ப மனு பெறப்பட்டு பணியிடம் மாற்றப்படும். இந்நிலையில் மதுவிலக்கு போலீசார் 32 பேரை பணி இடமாற்றம் செய்தும், புதிதாக 39 பேரை நியமித்தும் ஈரோடு எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற 2 ஓடைகள் சேர்ந்தது ஈரோடை. இதுவே காலப்போக்கில் மருவி ‘ஈரோடு’ என்றானதாக கூறப்படுகிறது. ‘பிரம்மதோசத்தின்’ காரணமாக இந்தியா வந்த சிவன் ஈரோடு கபால தீர்த்தத்தில் நீராடியபோது மண்டை ஓடை சிதைந்ததாகவும், அவை விழுந்த இடங்களே வேள்ளோடு(வெள்ளை மண்டை), பேரோடு(பெரிய மண்டை), சித்தோடு(சிறிய மண்டை) என்றானதாக கூறப்படுகிறது. இதே போல் ஈரோட்டை பற்றி நீங்கள் அறிந்தவை என்ன?
ஈரோடு சத்தி பேரூந்து நிலையம் முன்பு மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மாதாந்திர மின் கணக்கீட்டை அமுல்படுத்த வேண்டும், மின்வாரியத்தில் ஏற்பட்ட ஊழலுக்கு யார் யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று (25.7.24) மாலை கட்சியின் நகரச் செயலாளர் வாசுதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 538 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 85.47 அடியாக அதிகரித்து உள்ளது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.80 அடியாக உள்ளது. 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 25 அடியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூலை.25) பிற்பகல் முதல் மழை பெய்தது. அதன்படி, ஈரோடு அடுத்த மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதேபோல், பவானி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலும் பிற்பகல் தூரம் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் உருவானது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வரும் 27-7-2024 தேதி அன்று ஈரோடு மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் ஈரோட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 96988-07143 என்ற எண்ணை அழைக்கலாம்.
பவானிசாகர் அணை ஆகஸ்ட் 15ம் தேதி விவசாயத்திற்காக திறக்கப்பட உள்ளது. அதனை ஒட்டி வாய்க்காலில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அங்கு நடைபெற்று வரும் பணிகளை சென்று பார்வையிட்டார். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 50 அடிக்கும் கீழ் சரிந்தது. எனவே நீர்த்தேக்க பகுதியில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 85 அடியை தாண்டியுள்ளது. எனவே அணை பகுதியில் வண்டல் மண் எடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புஞ்சை புளியம்பட்டி ஸ்ரீ காமாட்சி அம்மன் மர அறுப்பு மில் அருகே அகில இந்திய விஸ்வகர்மா பேரவை & மதுரை கோல்ட் ஸ்மித் பிரைவேட் லிமிடெட் இணைந்து, ஆக.,3 ஆம் தேதி தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறவுள்ளது. தங்க நகை மதிப்பீடு, ஹால்மார்க் நகைகளை தரம் பிரித்தல் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் ஆண், பெண் இருபாலரும் சேரலாம் என்றும் வயது வரம்பு 18க்கு மேல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.