Erode

News July 29, 2024

விரைவில் ஈரோடு வருகிறார் உதயநிதி ஸ்டாலின்

image

ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு ஈரோடு வருகிறார். பின் ஆகஸ்ட் 2ம் தேதி நலத்திட்ட உதவிகள், அனைத்துத் துறை ஆய்வுக்கூட்டம், வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.

News July 29, 2024

காவிரிக்கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை பலகை

image

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 12,000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டினால் உபரிநீா் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

News July 29, 2024

ஈரோட்டில் அச்சுறுத்தும் வாட்ஸ்ஆப் அழைப்புகள்

image

வாட்ஸ் அப் குரல் அழைப்பு மூலம் பெற்றோரை அச்சுறுத்தும் மோசடி தொடா்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினா். ஈரோட்டில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை, வியாபாரி ஆகியோருக்கு வாட்ஸ் அப் அழைப்புகள் அண்மையில் வந்தன. அதில், ஓா் உயா் போலீஸ் அதிகாரியின் புகைப்படமும், போலீஸ் ஆபீஸ் என்பதும் இடம்பெற்றிருந்தன. அழைப்பில் +92 3276171573 என்ற எண் பதிவாகி இருந்தது. அது இந்திய எண் இல்லை.

News July 28, 2024

சாராயம் காய்ச்சிய 3 பேர் அதிரடி கைது

image

மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அதிரடி சோதனை நடத்தி பொன்னம்பாளையம் கார்த்திகேயன் (40), பூந்துறை சேமூர் அம்பேத்கர் நகர் கார்த்தி (28), குளூர் பகுதியைச் சேர்ந்த குமார் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்து சாராயம் (ம) காய்ச்ச பயன்படுத்திய உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

News July 28, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 28, 2024

ரேஷன் அரிசி கடத்தல்: புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

image

ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் 94981 68363, ஈரோடு மாவட்ட காவல் ஆய்வாளர் 80726 28234, ஈரோடு மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் 94981 75888 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

News July 28, 2024

ஈரோட்டில் நாளை மின்தடை

image

கோபிசெட்டிபாளையம் அடுத்த அளுக்குளி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 29) மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், அளுக்குளி, கோட்டுப்புள்ளாம்பாளையம், ஆண்டவர் மலை, பூதிமடைபுதூர், வெங்கமேட்டுப்புதூர், கோரமடை, கரட்டுப்பாளையம், கணபதிபாளையம், காசியூர், மூலவாய்க்கால், போடிசின்னாம்பாளையம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News July 27, 2024

சிறப்பு கிராம சபை கூட்டம்

image

ஈரோட்டில் வரும் 30ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். இதில், ஈரோடு மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற, திட (ம) திரவக் கழிவு மேலாண்மை உறுதி செய்யும் பொருட்டு 28 கிராம ஊராட்சிகளை ரைசிங் நிலைக்கும், 119 கிராம ஊராட்சிகளை ஓடிஎப் பிளஸ் மாடல் நிலைக்கு கொண்டு செல்ல கிராம சபை நடைபெறவுள்ளது.

News July 27, 2024

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

ஈரோடு, அம்மாபேட்டை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அம்மாபேட்டை பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள (ம) தாழ்வான பகுதியில் உள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளதால், அணையில் இருந்து 5000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

News July 27, 2024

ஈரோடு அருகே பாலியல் தொழில்

image

பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்களை மீட்டனர். பின்னர், ஷகிலா (40), திருப்பூரை சேர்ந்த லலிதா (38) திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஜன் ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!