India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், ஈரோடு மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்ச்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டுவருகிறது. எனவே உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் உயிருடன் உள்ளதை உறுதிப்படுத்த வாழ்நாள் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். தங்கள் பகுதி விஏஓவிடம் உரிய சான்று பெற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை (ஜூலை 31) மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு நாள் ஆகஸ்ட் 3ஆம் தேதி அரசு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். இந்நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஈரோடு எஸ்பி ஜவகர் தலைமையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூலை 30) அதிகாலையிலேயே தூரல் மழை பெய்தது. ஈரோடு அடுத்த மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை தூரல் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையின் மேற்கு கரை வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறக்கக் கோரி அம்மாபேட்டை பகுதி விவசாயிகள் அமைச்சர் சு.முத்துசாமியிடம் கடந்த 2 நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ளது. எனவே, இன்று காலை 11 மணிக்கு மேட்டூர் அணையின் மேற்கு மற்றும் கிழக்குக் கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழா அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் குதிரை சந்தையுடன் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு கருதி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட எஸ்.பி. ஜவகர் உடன் இருந்தார்.
குறுவை சாகுபடி மற்றும் ஆடிப்பெருக்கு விழாவுக்கு, மேட்டூர் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டது. அதேசமயம் இன்று அணை முழு கொள்ளளவை எட்டும் என்பதால், வினாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படலாம் என்பதால், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு போலீசார் சார்பில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடப்பட்டது.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவி தொகைகள், வீட்டுமனைப் பட்டா, கல்விக்கடன், அடிப்படை வசதி உள்ளிட்ட 250 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் பெற்று கொண்டார். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அந்தியூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகளவில் இருந்துவருகிறது. இதனால் காலை நடைப்பயிற்சிக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுவந்தது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் இரவு நேரத்தில் நாய்களைப் பிடித்து குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் 20,000 கனஅடி தண்ணீர் இன்று வெளியேற்றப்பட்டு வருகின்றது. அதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடுகிறது. பக்தர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி கூடுதுறையில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.