India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பர். வரும் 3ஆம் தேதி ஈரோட்டிலிருந்து ராமேஸ்வரத்திற்கும், ஆக.4ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து ஈரோட்டிற்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 3, 4ம் தேதிகளில் ஆடி பெருக்கு, ஆடி அமாவாசையையொட்டி பவானி, சங்கமேஸ்வரர் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயில், காங்கேயம்பாளையம், நட்டாட்ரீஸ்வரர் கோயில், நஞ்சைகாளமங்கலம், மத்தியபுரிஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில், அம்மாபேட்டை கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனிதநீராட இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.
ஈரோடு, கருங்கல்பாளையம் ஆற்றுப்பாலம் பகுதியில் இன்று காவிரியாற்றில் அதிக வெள்ளம் வருவதால், அங்கு சென்று அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டார். கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். உடன் ஈரோடு மாநகர செயலாளர் மு. சுப்ரமணியம் உடன் இருந்தார்.
➤ஈரோடு மாவட்டத்திற்கு வரும் ஆக.3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ➤ஈரோடு மாவட்டத்திற்கு இன்று இரவு (10 மணி வரை) இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ➤ஈரோட்டில் வரும் ஆக.2ஆம் தேதி புத்தக திருவிழா நடைபெறவுள்ளது. ➤ பவானி பழைய பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம், காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் தண்ணீர் வரத்தினை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஆக.3ல் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார். அதன்படி, அன்று மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, பவானி பழைய பாலம் வழியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செல்லும் வழி உள்ளது. இவ்வழியாக இரு சக்கர வாகனங்கள் கார் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையிலிருந்து 1,75,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், பவானி பழைய பாலத்தின் வழியாக செல்ல தடை செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 1-7-2023 முதல் 30-6-2024 வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மருத்துவ செலவுத்தொகை திரும்ப பெற விண்ணபிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகம் மூலம் மருத்துவ செலவின தொகை ரசீது உடன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் அனுப்ப வேண்டும் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் பரிசல் துறை, காங்கயம்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 77 நிவாரண முகாம்கள் தயார் நிலையிலும், அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையிலும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்தார்.
ஈரோடு அரசு தந்தை பெரியார் கூடுதல் மருத்துவமனை தலைமை மருத்துவமனையில் இன்று அமைச்சர் சு.முத்துசாமி தாய்ப்பால் வங்கி அறையை திறந்து வைத்தார். உடன் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் வி.செல்வராஜ், மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.