Erode

News August 6, 2024

அந்தியூரில் 700 போலீசார் பலத்த பாதுகாப்பு

image

அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் நடப்பாண்டு ஆடி தேர்த்திருவிழா நாளை முதல் 10ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த தேரோட்டத்திற்கு பல லட்சக்கணக்கான மக்கள் வருவர். எனவே திருவிழா பாதுகாப்பு பணிக்கு ஏடிஎஸ்பி தலைமையில், மூன்று டிஎஸ்பிக்கள், ஆறு இன்ஸ்பெக்டர்கள், உள்ளூர் மற்றும் ஆயுதப்படை போலீசார், ஊர்காவல் படையினர் என 700 பேர் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News August 6, 2024

ஈரோட்டில் நாளை மின்தடை அறிவிப்பு

image

ஈரோடு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் கலெக்டர் அலுவலக மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (ஆகஸ்ட் 7) நடப்பதால் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் நாளை மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: குமலன்குட்டை பஸ் நிறுத்தம், பாலக்காடு, பெருந்துறை ரோடு, வி.ஐ.பி.காலனி, திரு.வி.க.வீதி, ராணாலட்சுமணன் நகர்.

News August 6, 2024

புத்தக திருவிழாவில் சிந்தனை அரங்க சொற்பொழிவு

image

ஈரோடு, சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில்,
தமிழ்நாடு அரசு (ம) மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், ஈரோடு புத்தகத் திருவிழா 2024 நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாலை சிந்தனை அரங்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சூழலியலாளர் கோவை – சதாசிவம், ‘இன்னும் பிறவாத் தலைமுறைக்கு’ என்ற தலைப்பிலும், நகைச்சுவை நாவலர் புலவர் மா.இராமலிங்கம் ‘கற்றது கடுகளவு’ என்ற தலைப்பிலும் பங்கேற்று சொற்பொழிவாற்றினார்.

News August 5, 2024

ஈரோட்டில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்

image

ஈரோடு, அந்தியூர் குருநாதசாமி கோவில் ஆடி தேர்த்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு விழா கால சிறப்பு பேருந்து ஈரோடு, பவானி, கோபி, குருவரெட்டியூர், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

News August 5, 2024

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஆகஸ்ட்.5) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை (ம) காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 220 மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

News August 5, 2024

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஆகஸ்ட்.5) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை (ம) காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 220 மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

News August 5, 2024

ஈரோட்டில் வெளுத்து வாங்கிய மழை 

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளான திண்டல், வேப்பம்பாளையம், வாய்க்கால்மேடு, சாணார்பாளையம், கூரப்பாளையம், நஞ்சனாபுரம் பகுதிகளில் தற்போது இடி – மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கியது.

News August 5, 2024

நாளை குறைதீர் நாள் கூட்டம்

image

ஈரோடு, பெரியசேமூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நாளை (06.08.24) ஈரோடு மாவட்ட வனச்சரக பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு, ஈரோடு மாவட்ட வன அலுவலர் தலைமையில், குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள ஈரோடு வனச்சரக பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News August 5, 2024

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.93 அடியாக அதிகரிப்பு

image

பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 126 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 94.93 அடியாக அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், பாசனத்திற்கு என மொத்தம் 1,055 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

News August 5, 2024

கோபி நகர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே கோபி பஸ் நிலையம், பாரியூர், மொடச்சூர், வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன்கோவில், நாகதேவன்பாளையம், குறவன்பாளையம் பகுதிகளில் நாளை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!