India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக இன்றைய தினம் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்றைய தினம்
கனமழைக்கு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி பல்வேறு பிரிவுகளில், செப்., மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கான முன்பதிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 4ஆம் தேதி தொடங்கி வைத்தார்.அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ளவர்கள் ஆக.25ம் தேதிக்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில், நாட்டுப்புற கலைகளை பாதுகாக்கவும், இளைய தலைமுறையினரிடம் நாட்டுப்புற கலைகளை கொண்டு சேர்க்க, வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை நேரம் தப்பாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, கும்மி போன்ற கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே விருப்பம் உள்ளவர்கள், ஈரோடு-பி.பி.அக்ரஹாரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது, மாவட்டத்திலுள்ள சுற்றுலா தொடர்பான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூர்,வெளியூர் சுற்றுலா ஏற்பாட்டாளர் சுற்றுலா விருந்தோம்பல் உள்ளிட்ட சுற்றுலா தொடர்பான பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. www.tntourismawards.com என்ற இணையதள மூலம் வருகிற 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில், தேசியக்கொடி ரூ.25க்கு விற்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் தேசியக்கொடி வாங்க விரும்புவோர், www.epostoffice.gov.in n பதிவு செய்தால் தபால்காரர் மூலம் வீட்டுக்கே வந்து தேசியக்கொடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெருந்துறை அடுத்த கருக்கம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 4 மணிக்கு மேல் மிதமான மழை பெய்தது. இதேபோல், கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், ‘இலவச கோழி வளர்ப்பு பயிற்சி’ (ஆண்/பெண் இருபாலருக்கும்) ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவா்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவேரியில் திறக்கபடாததால், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி படகுத்துறையில் விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 13 நாட்களுக்குப் பிறகு விசைப்படகு போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டதால் சேலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இத்திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் கோவையில் துவக்கி வைத்தார். அவ்வகையில் இன்று ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோயில் பண்டிகை, ஏழாம் தேதி துவங்கி பத்தாம் தேதி வரை நடைபெறுகிறது. நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன், விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ ராஜா கிருஷ்ணன் உட்பட அதிமுகவினர் பலர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து பின் மாட்டுச்சந்தை குதிரைச் சந்தையை பார்த்துச் சென்றனர்.
Sorry, no posts matched your criteria.