Erode

News August 12, 2024

கம்மி விலையில் தங்கம்.. நம்பிடாதீங்க!

image

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் கம்மி விலையில் தங்கம் கிடைப்பதாக விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தங்கத்துக்கான வரி குறைந்ததையடுத்து நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ஆன்லைனில் தங்கம் விலை குறைவாகக் கிடைப்பதாக விளம்பரம் செய்து, ரூ.7 லட்சம் பணம் மற்றும் நகைகளை அபகரித்த கும்பலை சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர். மக்களே உஷார்.

News August 11, 2024

ஈரோட்டில் இன்றைய செய்திகள்

image

➤ஈரோடு மாவட்டம் கொளப்பலூர் துணை மின்நிலையம், வில்லரசம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை(12.8.24) மின்தடை அறிவிப்பு. ➤ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாக்கிங் மேற்கொண்டார். ➤ஈரோடு வந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு. ➤ஈரோட்டில் நவீன சிசிச்சை மையம் திறப்பு. ➤ஈரோட்டில் குதிரை ஏலத்தில் 1.50 கோடி வரை ஏலம் போனது.

News August 11, 2024

நடனம் ஆடிய குதிரை பிரியா விடை

image

ஈரோடு, அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் ஆடி தேர்த்திருவிழாவில் நான்கு நாட்களாக திருவிழாவை காண வரும் பொது மக்களையும் பக்தர்களையும் மகிழ்வித்து வந்த நடனமாடிய குதிரை இன்று குதிரை சந்தை முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து பக்தரிடம் இருந்தும் பொதுமக்களிடமிருந்தும் மாலை பிரியா விடை பெற்று சென்றது. பக்தர்கள் குதிரைக்கு கைகளை அசைத்து அனுப்பி வைத்தனர்.

News August 11, 2024

பாஜக மாநில தலைவருக்கு சிறப்பு வரவேற்பு

image

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க இன்று வந்தார். அப்போது அவருக்கு ஈரோட்டில், ஈரோடு மாவட்ட பாஜக சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் பைக் ஷோரூமினை திறந்து வைத்தார். இதில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News August 11, 2024

ஈரோட்டில் நவீன சிகிச்சை அறையை திறந்த அமைச்சர்

image

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவில் நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற கட்டணப் படுக்கைகள் கொண்ட அறையினை திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா உட்பட பலர் உள்ளனர்.

News August 11, 2024

ஈரோட்டில் கோடிகளில் பேசப்படும் குதிரை பேரம்

image

ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசாமி கோவிலில் ஆடி பெரும் தேர்த்திருவிழாவில் உலக புகழ் பெற்ற கால்நடை கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் ரூ.1 கோடிக்கு வெள்ளை காலா குதிரை விலை பேசப்பட்டது. மேலும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள பல்வேறு அம்சங்களுடன் கூடிய கருப்பு மார்வார் குதிரை ரூ.1.40 கோடி வரை விலை கூறப்பட்ட நிலையில், அதன் உரிமையாளர் குதிரையினை விற்பனை செய்ய முன்வரவில்லை.

News August 11, 2024

ஈரோட்டில் நாளை மின்சாரம் நிறுத்தம்

image

ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. எனவே வீரப்பம்பாளையம் சாலை, ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலசு, கருவில்பாறை, சூளை, அன்னை சத்யாநகர், முதலிதோட்டம், ஈ.பி.பி.நகர், கந்தையன் தோட்டம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News August 10, 2024

ஈரோட்டில் பரிசு வழங்கிய அமைச்சர்

image

பவானி அருகே உள்ள பிளாட்டின மஹாலில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு ஈரோடு மண்டல மகளிர் அணியினர் சார்பாக வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

News August 10, 2024

ஈரோட்டில் விருதுக்கு 34 பேர் விண்ணப்பம்

image

நடப்பாண்டு நல்லாசிரியர் விருது 11 பேருக்கு வழங்கப்படவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 51 ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், முறையாக பூர்த்தி செய்யப்பட்ட 34 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மற்ற 17 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறையினர் அறிவித்துள்ளனர்.

News August 10, 2024

ஈரோட்டில் விருதுக்கு 34 பேர் விண்ணப்பம்

image

ஈரோடு மாவட்டத்தில், நடப்பாண்டு நல்லாசிரியர் விருது 11 பேருக்கு வழங்கப்படவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 51 ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், முறையாக பூர்த்தி செய்யப்பட்ட 34 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மற்ற 17 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறையினர் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!