India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று(14.8.24) பொறுப்பேற்று கொண்டார். மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி பணியிட மாறுதலில் சென்றார். இதையடுத்து புதிய மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோயில் பண்டிகை கடந்த 7ஆம் துவங்கி 10ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த பண்டிகைக்கு 7 லட்சத்து 5 ஆயிரம் பேர் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுச்சந்தை குதிரைச்சந்தை காணவும் சாமி தரிசனம் செய்யவும் வருகை புரிந்துள்ளனர். 4 இடங்களில் பொழுதுபோக்கு, ராட்டினம், சாகசம், குழந்தைகள் விளையாட்டு என அமைக்கப்பட்டிருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 77 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள் மற்றும் வாகனங்கள் குறைந்த வாடகையில் வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகள் https://rcs.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் அருகில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை (ஆகஸ்ட் 15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுநிதி செலவினம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன கிராம ஊராட்சிகள் மூலம் தெரிவிக்கப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி மக்கள் அதிகம் கூடும் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். அந்த வகையில் ஈரோடு போலீசார் ஈரோடு ரயில் நிலைய நடைமேடை, ரயில்கள், பார்சல் அலுவலகம், வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் பயணிகளின் உடைமைகள் ஆகியவற்றை சோதனை செய்தனர். மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஈரோடு ரயில் நிலையத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு வந்த ரயில்களில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் உடைமைகளை
சோதனை செய்த பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் 42 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர்கள் 42 பேரை பணி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15), ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். மேலும் மேற்கூறிய தினத்தில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிபேட்டை மற்றும் சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கு இடையே காவிரி ஆற்றில் பயணிகள் படகு போக்குவரத்து உள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தற்போது 36,000 கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் பாதுகாப்பு கருதி விசை படகு போக்குவரத்து இன்று முதல் தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
➤அந்தியூர் அருகே மினிபேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ➤ஈரோடு மாவட்ட பாமக கட்சி செயலாளராக இருந்து கிருஷ்ணமூர்த்தி என்பவரை பதவி நீக்கம் செய்து அக்கட்சியின் நிறுவனர் உத்தரவிட்டுள்ளார். ➤தாளவாடியில் ஒற்றை யானை சாலையில் உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ➤ஈரோடு மாவட்டத்திற்கு இன்று இரவு மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.