Erode

News August 15, 2024

படகு இல்லம் அமைக்கும் இடத்தை எம்எல்ஏ ஆய்வு

image

அந்தியூர் பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றை இன்று அந்தியூா் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்து கொண்டு பார்வையிட்டார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார். படகு இல்லம் ஆரம்பித்தால் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

News August 15, 2024

குமரி அனந்தனுக்கு அமைச்சர் நேரில் வாழ்த்து

image

சுதந்திரத் திருநாளில் வழங்கப்படும் தமிழக அரசின் 2024ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது பெறவுள்ள சுதந்திர போராட்ட வீரரும், தியாகியுமான குமரி அனந்தனை காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக செய்தி துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தியாகி குமரி அனந்தன் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து பட்டாடை போர்த்தி இன்று வாழ்த்து தெரிவித்தார்.

News August 15, 2024

இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

image

ஈரோடு மாவட்டம் கனரா வங்கியின் மூலம் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் சுயதொழில் தொடங்குவதற்காக கோழி வளர்ப்பு பயிற்சி 10 நாட்கள் இலவசமாக உணவு உடையுடன் வழங்குகின்றன. இப்பயிற்சியானது ஈரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

News August 15, 2024

ஈரோட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தின விழா அமைதியான முறையில் நடைபெறும் வகையில் மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஈரோடு இரயில்வே போலீசார் சார்பில் காவிரி ஆற்றில் உள்ள இரயில்வே இரும்பு பாலத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News August 15, 2024

ரூ.5 கோடிக்கு புத்தங்கள் விற்பனை

image

ஈரோட்டில் தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், நடைபெற்ற ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று மாலை நிறைவு பெற்றது. இதில் 1000 தலைப்புகளில் புதிய புத்தகங்கள் மற்றும் 5 லட்சம் வாசகர்கள் புத்தகத் திருவிழாவிற்கு வந்துள்ளனர். மேலும் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகி இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

News August 14, 2024

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

image

ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள உணவு கடை, ஜூஸ் கடை மற்றும் பேக்கரி கடைகளில், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருந்த சுமார் 20 கிலோ எடையுள்ள தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் 4 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

ஈரோடு மாவட்டத்தில் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

image

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

error: Content is protected !!