India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், பெரியவலக, பாப்பாத்திகாடு, நாராயணவலசு , கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, மாணிக்கம்பாளையம், சத்தி சாலை, நேதாஜி சாலை, இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி பகுதிகளில் நாளை(17.8.24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளனர்.
ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், பெரியவலக, பாப்பாத்திகாடு, நாராயணவலசு , கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, மாணிக்கம்பாளையம், சத்தி சாலை, நேதாஜி சாலை, இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி பகுதிகளில் நாளை(17.8.24) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளனர்.
ஈரோட்டில் கடந்த 42 மாதங்களில் 17,067 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. இதில், ஈரோடு 3ஆம் இடத்தில் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையால் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் கொலை தொடர்பாக நாளை காலை 6 மணியிலிருந்து 24 மணி நேரம் நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்ய தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் (TNGDA) மாநில செயற்குழு அவசரமாக இன்று காலை 8 மணி அளவில் காணொளி வாயிலாக கூட்டப்பட்டது. இதில் மாநில தலைவர் கே.செந்தில் தலைமை வகித்தார்.
ஈரோடு மாவட்டத்தில், தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுகிறதா என பல்வேறு நிறுவனங்களில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறையினா் நேற்று ஆய்வு நடத்தினா். இதில் மொத்தம் 105 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு, விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் திருஞானசம்பந்தம் தெரிவித்துள்ளாா்.
ஈரோட்டில் நாளை (ஆக.17) மின்தடை அறிவிப்பு. காலை 9 முதல் மதியம் 2 வரை: சத்தி, காந்திநகர், நேரு நகர், ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, விஜபி நகர், செண்பகபுதூர், உக்கரம், சுண்டக்காம்பாளையம், சிக்கரசம்பாளையம், அய்யன்சாலை. காலை 9 முதல் மாலை 5 வரை: அந்தியூர், பர்கூர், தவிட்டுபாளையம், நகலூர், கொண்டையம்பாளையம், தோப்பூர், எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், பிரம்மதேசம், காட்டூர், சங்கராபாளையம்.
ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிவந்த 4 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடுகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுக,ம் பவானி காவல் துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி, கோபி காவல் துணை கண்காணிப்பாளர், ஈரோடு டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெய்சிங் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கிய நிலையில், இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக தற்போது அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.