Erode

News August 18, 2024

நாளை இப்பகுதியில் மின்தடை

image

ஈரோடு: சூரியம்பாளையம், பெரியாண்டிபாளையம், சிப்காட் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(19.8.24) மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், இப்பகுதியின் கீழ் உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 17, 2024

ஈரோடு இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு நாளை மறுநாள் விடுமுறை
➤ரூ.1,919 கோடி அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
➤முதல்வர் கோப்பை போட்டி, ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் தகவல்
➤ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாட்ஸ்அப் சேனல் https://whatsapp.com/channel/0029Va706tD
➤ஈரோட்டில் 500 மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

News August 17, 2024

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாட்ஸ்அப் சேனல்

image

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசின் திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் பொது சேவை தகவல்களை பொது மக்கள் அறிந்திட ‘வாட்ஸ் அப் சேனல்’ தொடங்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு மாவட்ட மக்கள்<> https://whatsapp.com/channel/0029Va706tDJ93we06DBga44<<>> (District Collector Erode) என்ற லிங்க் மூலம் வாட்ஸ்அப் சேனலில் இணைந்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

ஈரோடு: 500 மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

image

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஈரோட்டில் 500 மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பை செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன போன்ற 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

News August 17, 2024

முதல்வர் கோப்பை போட்டி: ஈரோடு ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாட்டில், நடப்பாண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 5 பிரிவுகளில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கான முன்பதிவை அமைச்சர் உதயநிதி, கடந்த 4ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ளவர்கள் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

அத்திக்கடவு அவினாசி திட்டம்: வரவேற்ற அமைச்சர்கள்

image

ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ரூ.1916.41 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாஜலம், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், கைதட்டி வரவேற்றனர்.

News August 17, 2024

அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடக்கம்

image

ரூ.1,919 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சற்றுமுன் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன்மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 3 மாவட்டங்களில் 74 ஏரிகள், 971 குளம் குட்டைகள் என 1,045 நீர்நிலைகளை நிரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; 24,468 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

News August 17, 2024

ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை

image

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கோபி, பெருந்துறை என மொத்தம் 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட் உள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 19) ஆவணி அவிட்டம் மற்றும் ரக்ஷாபந்தனை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆகஸ்ட் 20 முதல் வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடைபெறும் என ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

ஈரோடு: 60 ஆண்டு கனவு இன்று நனவாகிறது!

image

ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,450 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

News August 17, 2024

சென்னிமலையில் 152 பேருக்கு நலத்திட்ட உதவி

image

சென்னிமலை அம்மன் காட்டேஜ் பசுவபட்டியில் இன்று நடந்த விழாவில் 47 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், 105 ஊரகத் தொகுப்பு வீடுகளை சீரமைக்கும் பணிக்கான ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். இவ்விழாவில் ஈரோடு எம்.பி., பிரகாஷ் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, மாவட்ட கவுன்சிலர் எஸ் ஆர் எஸ் செல்வம், யூனியன் சேர்மன் காயத்ரி இளங்கோ கலந்து கொண்டனர்.

error: Content is protected !!