India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் தீபாவளி பண்டிகைையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதைக் கண்காணிக்க கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகளை துவக்கி வைத்து ஆய்வு செய்தார். இந்த நிலையில் ஈரோடு வந்த அவர் மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் பற்றிய ஆய்வு மேற்கொண்டார். போலீசாருக்கு தகுந்த அறிவுரையும் வழங்கினார். இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட எஸ்பி ஜவகர் உடன் இருந்தார்.
தீபாவளியை முன்னிட்டு, ஈரோட்டில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு இரயில் (எண்:06094) அக்.30, 31 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் காலை 04.55 மணிக்கு புறப்பட்டு காலை 11:55 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக அதே நாட்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து (இரயில் எண்:06093) மதியம் 2:45 மணிக்குப் புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு ஈரோட்டிற்கு வரும் என தெற்கு இரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நெல் விதைகள் 71.6 மெ.ட (மெட்ரிக் டன்), சிறுதானியங்கள் 30.9 மெ.ட., பயறுவகைகள் 13.61 மெ.ட., எண்ணெய் வித்துக்கள் 62 மெ.ட., யூரியா 5055 மெ.ட.,, டி.ஏ.பி 2404 மெ.ட., பொட்டாஷ் 2796 மெ.ட., காம்ப்ளக்ஸ் 8150 மெ.ட., இருப்பில் உள்ளது என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
பர்கூர் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள வட்ட காடு பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் பாம்புப் அப்பகுதியில் உள்ள விஜயா என்பவரது வீட்டுக்குள் இன்று மாலை புகுந்து விட்டது. தகவல் அறிந்ததும் அப்பகுதியில் உள்ளவர்கள் அந்த பாம்பை பத்திரமாக பிடித்து சாக்கு பையில் போட்டு பர்கூர் வனப்பகுதியில் விட்டனர்.
பர்கூர் மலைப்பாதையில் இருசக்கர வாகனம் லாரி நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த பந்தையன் தலையின் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த மாதையன் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக கடந்த 22ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதனை ஈடுசெய்யும் வகையில், இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலால் நடைபெறும் குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.அதன்படி கூட்ட நெரிசலில் பணம், செல்போன், நகை மற்றும் உடமைகளை கவனமாக பார்த்து கொள்ளவும். கூட்டமான இடங்களில் சட்டை மேல் பாக்கெட்டில் பணம், செல்போனை வைக்க வேண்டாம். மக்கள் மார்க்கெட் பகுதிகளில் வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தவும் என அறிவுறுத்தியுள்ளனர்.
கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (46). இவரின் பஜாஜ் இஎம்ஐ கார்ட் மூலம் ரூ.90,000க்கு பொருட்கள் வாங்கியதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. எனவே, அதிர்ச்சியடைந்த வேளாங்கண்ணி, கடந்த 19ஆம் தேதி ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, மோசடி செய்த பஜாஜ் நிறுவன இஎம்ஐ ஊழியர் கமலக்கண்ணன் (23) மற்றும் முன்னாள் ஊழியர் சுகந்த் (23) ஆகிரோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 22ஆம் தேதி மழையின் காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்தது. அவற்றை தொடர்ந்து நாளை சனிக்கிழமை 26 ஆம் தேதி தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி அனைத்து பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை பாட வேலையை கொண்டு, முழு வேலை நாளாக செயல்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.