Erode

News September 8, 2024

ஈரோடு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வடமேற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) ஈரோடு மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

ஈரோட்டில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

image

ஈரோடு ஈ.வி.என் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் செப்டம்பர் 11 அன்று நடைபெற உள்ளது. இதில் சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், அறச்சலூர், எழுமாத்தூர், முள்ளாம்பரப்பு பகுதி மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News September 8, 2024

அரசு மருத்துவமனையில் 14 லி தாய்ப்பால் சேகரிப்பு

image

ஈரோடு, அரசு தலைமை மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு உயர் சிகிச்சை மையத்தில் தாய்ப்பால் வங்கி ஆக.1 முதல் தொடங்கப்பட்டது. இந்த தாய்ப்பால் வங்கியில் 200 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தாய்ப்பால் வழங்கி உள்ளனர். இதில் கடந்த மாதம் 14 லிட்டர் தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது. இந்த பால் தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 8, 2024

ஈரோடு: பெருந்துறையில் புதிய சுத்திகரிப்பு நிலையம்

image

தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது “பெருந்துறையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் தொடங்க ஒப்பந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் கட்டுமான பணி தொடங்கப்படும் எனவும், மேலும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் 746 குளங்களுக்கு மட்டுமே தண்ணீர் சென்றுள்ளது, மீதியுள்ள 269 குளங்களுக்கு விரைவில் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News September 7, 2024

பவானியில் லாரி மீது பைக் மோதி இருவர் பலி

image

பவானி அருகே தொட்டியபாளையம் என்ற இடத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் பவானியில் இருந்து அந்தியூர் வந்து கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பைக்கில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர். பவானி போலீசார் உடலை கைப்பற்றி பவானி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யார், எந்த ஊர் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 6, 2024

ஈரோடு அருகே அதிரடி சோதனை..!

image

ஈரோடு: கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் புரோக்கர்கள், அதிகாரிகளிடம் இருந்து கணக்கில் வராத ரூ.70,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள், அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணை நடத்தினர்.

News September 6, 2024

ஈரோட்டில் உயர்வுக்குப் படி சிறப்பு முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 படித்த மாணவர்களில், உயர் கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை உயர் கல்விக்கு ஊக்கப்படுத்தும் வகையில், ‘உயர்வுக்குப் படி’ என்ற சிறப்பு முகாம், வரும் 9ம் தேதி – மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம், கல்வி கடன் வழங்கும் லோன் மேளாவும் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயனடையலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

ரூ.10 நாணயம்: ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் வரப்பெறும் அரசால் வெளியிடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்களை பெறுவதற்கு மறுக்கக்கூடாது, சட்டபூர்வமாக நாணயங்களை ஏற்க மறுப்பது சட்டத்திற்கு எதிரானது. எனவே பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி ஆகியோர் தங்களிடம் வரப்பெறும் பத்து ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

News September 6, 2024

கோபியில் IPS அதிகாரி கைது

image

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியைச் சேர்ந்தவர் IPS அதிகாரி அருண் ரெங்கராஜன். இவர் வீட்டிற்கு உள்ளே இருந்து தீ வைத்துக் கொண்டார். அவரை மீட்பதற்காக அப்பகுதியைச் சார்ந்த இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் முயன்றுள்ளார். அப்பொழுது இன்ஸ்பெக்டர் மோகன்ராஜை தாக்கியதாக கோபி போலீசார் IPS அதிகாரி அருண் ரெங்கராஜனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 6, 2024

ஈரோட்டில் உள்கட்சித் தேர்தல்

image

SDPI கட்சியின் கிளை முதல் தேசிய அளவிலான உட்கட்சி தேர்தல் 2024-2027 ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பாக நேற்று நடைபெற்றது. பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புஞ்சைபுளியம்பட்டி நகரில்  தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலை தேர்தல் அதிகாரி (RO) A.சமீருல்லா நடத்தினார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் A.M.முகசின் காமினூன் மற்றும் மாவட்ட துணை தலைவர் S.சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

error: Content is protected !!