Erode

News September 14, 2024

ஈரோடு அருகே சரக்கு லாரி மோதி விபத்து

image

பவானி அடுத்த ஊராட்சிக்கோட்டை பேரேஜ் பகுதியில் லாரி மீது கழிவுநீர் வாகனம் மோதி விபத்து ஏற்ப்பட்டது. மேட்டூரில் இருந்து பவானி நோக்கி இன்று மாலை சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி ஊராட்சிக்கோட்டை அருகே வரும் போது எதிரே பவானியில் இருந்து வந்த கழிவுநீர் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டது. அப்போது கழிவுநீர் வாகனம், சரக்கு லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்திற்குள்ளானது.

News September 13, 2024

ஈரோடு BUS STANDல் குவிந்த பயணிகள்

image

ஈரோட்டில் வார விடுமுறை தினமான சனி, ஞாயிறு – ஓணம் அரசு விடுமுறை தினமான செவ்வாய் (மிலாடிநபி) என 3 நாள் விடுமுறை வருகிறது. மேலும் பல்வேறு கல்லூரிகளில் திங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாற்று பணி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று மாலை கூட்டம் அதிக அளவில் இருந்தது.

News September 13, 2024

ஈரோடு: தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

image

ஈரோடு மாவட்டத்தில், வணிகர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு விற்பனைக்கு தற்காலிக பட்டாசு உரிமம் பெற பொது இ-சேவை மையங்களில் மூலம் தகுந்த ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சேவை கட்டணமாக 0070-60-109-ஏஏ-22738 வங்கி கணக்கில் ரூ.600 செலுத்தியதற்கான ரசீது உடன் அக்டோபர் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

தேர்தல்: ஈரோட்டில் உதயநிதி போட்டி?

image

பல தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து வெற்றிபெற்று வந்தது. கடந்த மக்களவைத் தேர்தல், இதை உதயநிதி உடைத்துவிட்டார்; கொங்கு மண்டலத்தையும் திமுக கோட்டையாக மாற்றிவிட்டார். அதனால், வரும் சட்டசபை தேர்தலில், மொடக்குறிச்சியில் போட்டியிடும்படி உதயநிதியிடம் பேசியுள்ளேன். அவர் போட்டியிடுவதற்கு ஏற்ப களத்தை நாம் தயார் செய்ய வேண்டும் என திமுக இளைஞர் அணி துணை செயலரும், ஈரோடு எம்பியுமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

ஈரோடு: 1.41 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளா்கள் பதிவு

image

தேசிய அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பாதுகாப்பினை வழங்க மத்திய அரசு ‘e-sharm’ திட்டத்தை துவங்கியுள்ளது. இதில் 156 வகை தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். இதில் பதிவுசெய்வோருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள பெற்றவா்கள் விபத்தில் மரணமடைந்தால் ரூ.2,00,000, உடல் ஊனமுற்றால் ரூ.1,00,000 இழப்பீடு பெறலாம். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 1,41,712 தொழிலாளா்கள் இத்திட்டத்தில் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

News September 13, 2024

ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிப்பு

image

ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு மிலாடி நபியையொட்டி வரும் 16ஆம் தேதி (திங்கள்) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிலாடி நபி 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையடுத்து, தமிழ்நாடு அரசு அன்று விடுமுறை அறிவித்தது. எனவே ஈரோட்டில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுகள் 17ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 16ஆம் தேதி வழக்கம்போல மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

News September 13, 2024

ஈரோடு BUS STAND-இல் அபராதம்!

image

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பஸ்களில் தடைசெய்யப்பட்ட ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா? அனுமதி பெறப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறதா? கூடுதல் பயண கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன் தலைமையில் நேற்று ஆய்வுசெய்யப்பட்டது. முறையான வழித்தட விவரம், கட்டண விவரம் இல்லாதது, சீட் பெல்ட் அணியாமல் பஸ்களை இயக்கியதாக 10 ஓட்டுநர்கள் மீது வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

News September 12, 2024

ஈரோடு: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளர் பணி

image

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டி.பி ஹாலில், ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (14ம் தேதி) நடைபெற உள்ளது. எனவே தகுதியான நபர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-28888060 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை ஒருங்கிணைப்பாளர் கவின் தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

ஈரோட்டுக்கு அமைச்சர் 5 புது பஸ்கள் தொடங்கி வைப்பு

image

ஈரோட்டில் இயங்கிக் கொண்டிருந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய 5 பேருந்துகளை (ஈரோடு To சேலம், ஈரோடு To கோவை , ஈரோடு To மைசூரு) தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி கொடியசைத்து துவங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் இருந்தனர்.

News September 12, 2024

ஈரோடு: இன்று கடைகள் அடைப்பு

image

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவையொட்டி சென்னிமலை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பாக இன்று கடை அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள், செல்போன் கடைகள், பேக்கரிகள் அடைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல் மருந்து, பால், காய்கறி கடைகள் செயல்பட்டன. இன்று மாலை நான்கு மணிக்கு அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.

error: Content is protected !!