Erode

News September 18, 2024

நியாய விலைக்கடையில் ஆட்சியர் ஆய்வு

image

ஈரோடு, பவானி அடுத்த குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனை ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் ஆய்வு செய்தார். அங்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News September 18, 2024

ஈரோட்டில் அசத்திய சென்னிமலை மாணவிகள்!

image

முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டி ஈரோட்டில் வஉசி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் சென்னிமலை எம்பிஎன் பொறியியல் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்தனர். அவர்களுக்கு ரூ.3000 ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் வசந்தி சுத்தானந்தன் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

News September 18, 2024

ஈரோடு: ரயில் பயணி தவறி விழுந்து உயிரிழப்பு

image

சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தன் குமார் (27), இவர் திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பெங்களூருவில் உள்ள தனது உறவினரை பார்க்கச் சென்ற இவர் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூர் நோக்கி வந்துள்ளார். பெருந்துறை ரயில் நிலையத்தை கடந்து சிறிது தூரத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 18, 2024

ஈரோடு நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு

image

ஈரோடு நகரில் தினசரி போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஈரோடு நகருக்கு வரும் கருங்கல்பாளையம் சோதனை சாவடியில், காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்கள் ஈரோடு மாநகருக்குள் நுழையக்கூடாது என்ற அறிவிப்பு பலகை நேற்று வைக்கப்பட்டது.

News September 18, 2024

ஈரோடு-செங்கோட்டை ரயில் இன்று முதல் ரத்து

image

ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் இன்றுமுதல் அடுத்த மாதம் 7ஆம் தேதிவரை திண்டுக்கல் வரை இயக்கப்படுகிறது. மதுரை கூடல் நகருக்கும், சமயநல்லூருக்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே திண்டுக்கல்லிலிருந்து செங்கோட்டை வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஆனால் செவ்வாய்க்கிழமை மட்டும் ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை இயக்கப்படும்.

News September 17, 2024

சென்னிமலைக்கு வானங்கள் செல்ல தடை

image

சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைக்குச் செல்ல தார் சாலை வழியாக செல்ல 18.09.2024 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. படி வழியாக மட்டுமே செல்ல பக்தர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள், மறு அறிவிப்பு வரும் வரை வாகனங்கள் மலைக்கு செல்ல அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 17, 2024

ஈரோடு கலெக்டர் பெரியார் சிலைக்கு மரியாதை

image

பெரியார் பிறந்தநாள் விழா இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோட்டில் பெரியார் – அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 17, 2024

ஈரோட்டில் பெரியார் இல்லம் எப்படி இருக்கிறது?

image

ஈரோடு, பெரியார் வீதியில் பெரியார் – அண்ணா நினைவு இல்லம் உள்ளது. இந்த இல்லம் இன்றும் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் பெரியார் தொடர்பான புகைப்படங்கள், ஆவணங்கள், தனிப்பட்ட உடைமைகளான கட்டில், சேர் போன்ற பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவகத்தில் பெரியாரின் சமூக சீர்திருத்தம் மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகள் தொடர்பான புத்தகங்கள் கொண்ட நூலகமும் உள்ளது.

News September 17, 2024

ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவை மாற்றம்

image

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு-செங்கோட்டை ரயில், கரூா் வழியே திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. மதுரை கோட்டம், சமயநல்லூா்-கூடல்நகா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு-செங்கோட்டை ரயில் செப்.18 முதல் அக்.7 வரையும், செங்கோட்டை-ஈரோடு ரயில் செப்.19 முதல் அக்.8 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News September 17, 2024

ஈரோட்டில் சதம் அடித்த வெயில்: மக்கள் கடும் அவதி

image

ஈரோட்டில் கடந்த வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது இது நேற்று 100 டிகிரி தொட்டது, இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள், நேற்று ஈரோட்டில் வெயில் அதிகபட்சமாக102.2 டிகிரி ஆகும். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் மதியம் வெளியே வரத் தயங்கினார்கள் சாலைகளில் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது.

error: Content is protected !!