India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த அமைந்துள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் இந்த சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். அதிக அளவில் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் பறவைகளை அச்சுறுத்தும் வண்ணம் சரணாலயத்தை சுற்றியுள்ள கிராமங்கள் கடந்த 18 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றன.
தமிழுக்கு தொண்டு செய்து, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள், www.tamilvalarchithurai.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் பூர்த்திசெய்த விண்ணப்பத்தை ஆவணங்களுடன் அக்.31-க்குள் ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வாணிபுத்தூர் பேரூராட்சியில் அண்ணா சிலை அருகில் திராவிடக் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் சாமி கை வல்யம் தொண்டறச்சிறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழர் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நூலை வெளியிட்டார். திமுக மாவட்ட செயலாளர் என் நல்ல சிவம், அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாஜலம், ஒன்றிய செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில், டூவீலரில் வந்த முதியவர், பஸ் மோதியதில் பலியானார். இதைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதைப் பலரும் கவனிக்கவில்லை. பஸ் ஸ்டாண்டிற்குள் இருசக்கர வாகனங்களை ஒட்டி சென்று வந்துள்ளனர். இதனால் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலில் நடைபெறும் நடப்பாண்டு கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. பின் உற்சவர் மற்றும் மூலவருக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனையும், தொடர்ந்து 1.30 மணிக்கு வள்ளி தெய்வானைக்கு அபிஷேகமும் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகளில் 90 விற்பனையாளர், 9 கட்டுநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இப்பணி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன் https://drberd.in/ என்ற இணையதளம் மூலமாக நவம்பர் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆள் சேர்ப்பு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 7 வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த லாரியில் பின்புறத்தில் மோதிய கார் ,லாரி மற்றும் கார் ஓட்டுநர்களின் வாக்குவாதத்தால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வாகனங்கள் அனைத்தும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நிற்கிறது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் பெருந்துறை சாலையில் கூற பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி வாலிபர் கீழே விழுந்ததில் பலத்த காயமுற்றோர், பொது மக்கள் அந்த வாலிபரை மீட்டு ஆம்புலன்ஸில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்தியூர் அருகே உள்ள முத்து கவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 40 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி தங்களுக்கு நடைபாதை இல்லை அதனால் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி இன்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெருந்துறை பகுதிகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் புகையிலைப் பொருள்கள் தீவைத்து சனிக்கிழமை நேற்று அழிக்கப்பட்டது. இதையடுத்து கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட சிலேட்டா்புரத்தில் உள்ள பேரூராட்சி குப்பைக் கிடங்கில் பெருந்துறை காவல் ஆய்வாளா் தெய்வராணி, உதவி காவல் ஆய்வாளா் ஜீவானந்தம் உள்ளிட்ட போலீஸ்காரா் முன்னிலையில் இந்த புகையிலைப் பொருள்கள் தீவைத்து எரித்து அழிக்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.