India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு
சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 24ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடயலாம். மேலும் தகவலுக்கு 94999-33475 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
உலகில் தற்போது சைபர் குற்றங்கள் புதிய மோசடியாக உருவெடுத்துள்ளது. கே.ஓய்.சி., அப்டேட் அல்லது கிரெடிட் கார்டு புதுப்பித்தல் என்ற பெயரில் வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம். தங்கள் தனிப்பட்ட விபரங்களை யாரிடமும் அளிக்க வேண்டாம். இதனால் தங்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளது. மேலும் சைபர் கிரைம் குற்றங்களை தெரிவிக்க உதவிக்கு 1930 எண்ணை அழைக்கலாம் என ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளோடு அடுத்துள்ள தண்ணீர்பந்தலைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரும் சேலம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தம்பதிக்கு 3 குழந்தைகள். கார்த்திகா இன்ஸ்டா மூலம் ரீல்ஸ் வெளியிட்டுவந்தார். இதற்கு லைக், கமெண்ட்களும் அதிகரித்ததால் தினமும் ரீல்ஸ் போட ஆரம்பித்தார். இதை கணவர் கண்டித்ததால் குழந்தையுடன் மாயமானார். புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக மருத்துவக் குழுவினர் ஈரோடு கிளைச் சிறையில் கைதிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தினர். 50 கைதிகளுக்கு மேல் உள்ள ஈரோடு சிறையில் 11 கைதிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது. அவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
விஜயமங்கலம் புலவர்பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (37) என்பவர் பவர்லூம் தறிப்பட்டறை நடத்தி வந்தார், இவரது தம்பி தமிழ்ச்செல்வன். இவர்கள் இருவரும் நேற்று பெருந்துறைக்கு பைக்கில் வந்துவிட்டு ஊருக்கு திரும்பும் வழியில் சீனாபுரம் துடுப்பதி பிரிவு அருகே முன்னாள் சென்ற பஸ்ஸை முந்த முயன்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் இருவரும் காயம் அடைந்தனர். இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் லெமன் ஜூஸில் அதிகம் நாட்டம் செலுத்துகின்றனர். இதனால் எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது; மேலும் எலுமிச்சையின் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு வஉசி மார்க்கெட்டில் எலுமிச்சம்பழம் கிலோ ரூ.220 ஆக உயர்ந்துள்ளது என மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (செப்.20) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே எழுமாத்தூர், வெள்ளபெத்தாம்பாளையம், மண்கரடு, வே.புதூர், எல்லக்கடை, குலவிளக்கு, மின்னக்காட்டுவலசு, மொடக்குறிச்சி, வெப்பிலி, குளூர், பூந்துறை, வடுகப்பட்டி பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் மாவட்ட பொருளாளர் ரஞ்சித்தின் பேரன் பிறந்ததை கேள்விப்பட்டு வரும் வழியில் வாகனத்தை நிறுத்தி மருத்துவமனை சென்று குழந்தையை கையில் எடுத்து “வளவன்” என்று பெயர் சூட்டி தாயை உடல் நலம் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறினார். அவரைக் கட்சியினர் வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்.
ஈரோடு, ரங்கம்பாளையத்தில் உள்ள டாக்டர்.ஆர்ஏஎன்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வரும் செப்.21ஆம் தேதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9444094274 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் தினசரி போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பொருட்டு 20.09.2024 முதல் மாநகராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் தலைமை வகித்தார். இதில் மாநகர காவல் (ம) போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.