India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு தினத்தை ஒட்டி இன்று ஈரோட்டில் அவரது தீவிர ரசிகர்கள், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் ஆதரவற்ற 25 பேருக்கு உணவு வழங்கினர் . டிக்கடை வைத்திருக்கும் அவரது ரசிகர், தனது கடை முழுவதும் நடிகையின் புகைப்படங்களைக் கொண்டு அலங்கரித்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்து வருவதாக நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், போலீசாரின் விருப்ப பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 17 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 32 தலைமை காவலர்கள் மற்றும் முதல்நிலை காவலர்கள் உள்பட மொத்தம் 74 பேர் பணியிட மாற்றம் செய்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, சூரம்பட்டி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கணேசன் மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு, அந்தியூர் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சென்ற மினி டெம்போ கவிழ்ந்தில் 11 பெண்கள் உட்பட 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த வாகனத்தின் ஸ்டீயரிங் லாக் ஆனதாக கூறப்படும் நிலையில், ஆலயங்கரடு என்று இடத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக சென்று அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அம்மாபேட்டை அடுத்த வெள்ளக்கரட்டூரில் உள்ள வெள்ளிமலையில், மிகவும் சிறப்பு வாய்ந்த தண்டாயுதபாணி (முருகன்) திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாலை, கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நம்பியூர், ஒழலக்கோயில் ஊராட்சி மலையப்பாளையத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர்கள் தம்பி(எ)சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நகர, பேரூர், ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுனிக்கடையில் T Shirt ரூ.50-க்கு விற்பனை என்ற அறிவிப்பால் கடை முன் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், அப்பகுதியில் திரளான இளைஞர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், ஜவுளி விற்பனையை நிறுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
ஈரோடு, மூலப்பாளையம் எல்ஐசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஸ்டெல்லா. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் மாடியில் உள்ள வீட்டை வாடகைக்கு விடுவதாக அறிவித்திருந்தார். இதைகண்ட பெண் ஒருவர் வீடு பார்க்க வருவது போல நடித்து, மேரி ஸ்டெல்லா மீது மிளகாய் பொடியை தூவி, நகையை பறிக்க முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன், அப்பெண்ணை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்தியூர் அருகே வெள்ளி திருப்பூர் ஆலயங்கரடு பகுதியில்
கூலி வேலைக்கு மினி ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 16 பேர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 3:30 மணிக்கு மேல் திடீரென தூரல் மழை பெய்தது. தொடர்ந்து ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம் ஆகிய பகுதிகளில் தற்போது வெயிலுடன் கூடிய மிதமான மழை கடந்த 15 நிமிடங்களாக பெய்து வருகிறது.
ஈரோட்டில், மேட்டூர் சாலையில் உள்ள ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி பயிற்சி மையத்தில், திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில் செப்டம்பர் 23ஆம் தேதி தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் ஆண்/பெண் இருவரும் பங்கேற்கலாம் என திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.