India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மாவட்டத்தில் (18.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.19) காலை 9மணி முதல் மாலை 5மணி வரை, தளவாய்பேட்டை, ஆப்பக்கூடல், ஜம்பை, எலவமலை, வைரமங்கலம், அரச்சலூர் நகர், தலவுமலை, வடபழனி, கந்தசாமிபாளையம், சித்தோடு, நரிப்பள்ளம், பெரியபுலியூர், சேவக்கவுண்டனூர், பெருமாள்மலை, ஓலப்பாளையம், செட்டிபாளையம், நத்தக்காடையூர், காடையூர், கவுண்டம்பாளயம், காங்கயம்பாளையம், பழையக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

1). ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2.) ஈரோடு மாவட்ட ஆட்சியர் 0424-2260211 3).மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 0424-2260211. 4).விபத்து அவசர வாகன உதவி 102. 5).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 6).பெண்கள் உதவி எண் 181. 7). முதியோர்கள் உதவி எண் 14567. 8).பேரிடர் கால உதவி 1077. 9).சைபர் க்ரைம் உதவி எண்1930. 10).இரத்த வங்கி சேவை 1910, இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகளுக்கு மிகவும் வலிமையான கடவுச்சொற்களை (Strong Passwords) பயன்படுத்த வேண்டும் என்றும், அவற்றை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

ஈரோடு மக்களே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் இன்றே கடைசி நாள். பெயர் சேர்க்க விரும்புவோர் https://voters.eci.gov.in/ இணையதளத்தில் படிவம் 6-ஐயும், முகவரி அல்லது பெயர் திருத்தம் செய்ய விரும்புவோர் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். SHAREIT

ஈரோடு மக்களே ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் <

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு அருகே அமைக்கப்பட்டுள்ள காலிங்கராயரின் முழு உருவ வெண்கலச் சிலை மற்றும் அதன் கீழ் இயங்கும் நூலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கிறார். இந்த நூலகத்தில் காலிங்கராயர் வரலாறு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டம் அத்தாணி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷின் மகன் சரண் (8). இவர் கடந்த மாதம் வீட்டின் முன்பு குளிர் காய தீ மூட்டியபோது, எதிர்பாராதவிதமாக மண்எண்ணெய் கேன் சரிந்து விழுந்து தீக்காயம் அடைந்தான். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன், தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த நிலையில், இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.