Erode

News March 22, 2024

தேர்தல்: தா.மா.கா வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழக மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் ஈரோடு தொகுதி தா.மா.க வேட்பாளராக விஜயகுமார் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி சார்பில் தா.மா.கா வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 2 தொகுதிகளுக்கு தா.மா.கா சார்பில் ஜி.கே.வாசன் தற்போது வேட்பாளர்களை அறிவித்தார்.

News March 22, 2024

ஈரோடு : ரூ.96.34 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.96 லட்சத்து 34 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு ரூ.22 லட்சத்து 66 ஆயிரம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 22, 2024

பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா அடுத்த மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோயில் திருவிழா நிகழ்ச்சி தினந்தோறும் நடைபெற்று வருகின்றது. அவற்றின் பாதுகாப்பு பற்றி நேற்று அந்தியூர் பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் கோவில் செயல் அதிகாரி சீதாராமன் தலைமையில், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 21, 2024

புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டது. எனவே வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்த புகார்களை 9655220100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2024

ஈரோடு தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுக-வுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார். இந்தத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான்.

News March 21, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

சத்தியமங்கலம் அடுத்த அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் குண்டம் பெருந்திருவிழா மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News March 21, 2024

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

ஈரோடு அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அப்போது ஆற்றல் அசோக்குமார் செய்தியாளர் சந்திப்பில், நான் போராளி அல்ல மக்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். ஈரோடு மாவட்டத்தில் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணவும் இழந்த தமிழக உரிமைகளை மீட்கவும் பாடுபடுவேன் என்றார்.

News March 21, 2024

ஈரோடு: முதல்வரை சந்தித்து கோரிக்கை

image

ஈரோடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
மனுவில், “நிலைகட்டணம் திரும்பபெற வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்த உள்ள மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். சோலாருக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார்.

News March 21, 2024

ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.