India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤ ஈரோடு- சென்னை சென்ட்ரல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் அக்30, 31, நவ-3 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். ➤ ஈரோடு தபால் நிலையத்தில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் முகாம் நவ1ஆம் தேதி நடைபெறவுள்ளது. ➤ கோபி அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் உயிரிழந்தது. ➤ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்.30, 31, நவ.03 ஆகிய தேதிகளில் இயக்கப்படவிருந்த ஈரோடு- சென்னை சென்ட்ரல் சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (06094/06093) முன்பதிவில்லா சிறப்பு ரயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் கூறியிருப்பதாவது: நவ.1ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் அந்தந்த பகுதி தபால்காரர் மூலமாக ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க முகாம் நடத்தப்பட உள்ளது. இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.
ஈரோட்டில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற, மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி மற்றும் கிராமிய கலை வழி விழிப்புணர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா இன்று வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மற்றும் கோபியில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் பொறியியல் பாடப்பிரிவுகள் இன்டஸ்டரி 4.0 திட்டத்தின்கீழ், தொழில் நுட்பத்துடன் புதிதாக துவங்கப்பட்ட தொழில் பிரிவுகளில், காலியாக உள்ள 26 இடங்களுக்கு நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை (அக்.30) வரை நடைபெறுகிறது. தரமான பயிற்சி, இலவச சீருடை, புத்தகம் ஆகியவை வழங்கப்படும் என ஐ.டி.ஐ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபி அருகே அயலூர் எல்லப்பாளையத்தில் சேர்ந்த விவசாயி கருப்புசாமி, இவர் தனது வீட்டின் அருகே பட்டியில் அடைத்து ஆடுகளை வளர்த்துவருகிறார். நேற்று காலை ஆடுகளை திறந்து விடுவதற்காக சென்ற கருப்புசாமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 9 ஆடுகளை மர்ம விலங்கு கொன்று விட்டுச் சென்றுள்ளது. இதனை அடுத்து வன அலுவலருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசாரும் விரைந்து வந்தனர், ஆடுகளைக் கைப்பற்றி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை நேற்று சோதனையிட்டனர். நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ரயில் பயணத்தின்போது பட்டாசுகள் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பட்டாசுகள் எதையும் எடுத்துச் செல்கின்றனரா? என ரயில்வே போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அனைத்து தொழிற்சாலைகளும் 2025ஆம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். இதற்கு https://dish.tn.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் அக்டோபர் 31க்கு பின் விண்ணப்பித்தால் தாமத கட்டணம் செலுத்த வேண்டும் என ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் முதுநிலை பட்டம் சமூகவியல் , உளவியல் சமூகப் பணிகள் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்று கணினி தெரிந்தவர்கள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு அடுத்த மாதம் ஒன்பதாம் தேதிக்குள் மாவட்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் மாத ஊதியம் ரூ 30,000 என ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுங்கரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (அக்.28) நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் திட்டம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை (ம) காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.