Erode

News October 31, 2024

வெடி விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

image

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.

News October 31, 2024

ஈரோடு மக்களே இதை மட்டும் செய்யாதீங்க

image

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஈரோடு மக்கள் தீபாவளியன்று தவிர்க்க வேண்டிய செயல்களை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். அதன்படி, பட்டாசுகளை கையில் வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

News October 31, 2024

தீபாவளி: மக்களே கவனமா கொண்டாடுங்க!

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட ஈரோடு மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்!

News October 30, 2024

பவானிசாகர் அணை நீர்மட்ட நிலவரம்

image

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,863 கன அடியாக வருகிறது. அணையின் நீர் மட்டம் 91.35 அடி, நீர் இருப்பு 22.47 டி.எம்.சி., அணையிலிருந்து வினாடிக்கு 2,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News October 30, 2024

ஈரோடு பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஈரோட்டில் தங்கி பணிபுரியும் வெளியூர் தொழிலாளர்கள் இன்று காலை முதல் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் ஈரோடு பஸ் நிலையத்தில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் இருந்தது. மேலும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

News October 30, 2024

ஈரோடு: ஜவுளி வாங்க படை எடுக்கும் பொது மக்கள்

image

ஈரோடு தீபவாளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒருநாள் உள்ள நிலையில் ஜவுளி,பட்டாசு, வீட்டு உபயோகப்பொருட்களை வாங்க கடைவீதிகளுக்கு பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் ஜவுளிக்கடையில் கடந்த ஒரு வாரமாக விற்பனை களைகட்டி உள்ளது.ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையத்துக்கும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் என்பதால் சூரம்பட்டி நால்ரோடு வழியாக வாகன ஓட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

News October 30, 2024

ஈரோடு மாவட்டத்தில் 19.64 லட்சம் வாக்காளா்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளில் 19.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார். மாவட்ட அளவில் அந்தியூரில் குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதியாகவும், ஈரோடு மேற்குத் தொகுதி அதிக வாக்காளர் உள்ள தொகுதியாகவும் உள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை வாக்காளர் பட்டியலுடன் தங்களது ஆதார் எண்ணை 63.86 சதவீத போ் இணைத்துள்ளனர்.

News October 30, 2024

தீபாவளி: ஈரோடு கலெக்டர் சொன்ன அட்வைஸ்

image

ஈரோட்டில் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன், நிலம், நீர், காற்று மாசுபடாமல் கொண்டாட, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தியுள்ளார். தீபாவளியன்று காலை, 6 மணி முதல், 7 மணி வரை; இரவு, 7 முதல், 8 மணி வரையும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

News October 30, 2024

ஈரோட்டில் இன்று முதல் 5 நாள் விடுமுறை

image

ஈரோட்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல், 5 நாட்கள் ஈரோடு, மஞ்சள் வணிக வளாகம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நவம்பர் 4ஆம் தேதி, திங்கள்கிழமை மஞ்சள் வணிக வளாகம் வழக்கம்போல் செயல்படும் என மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

News October 30, 2024

எலத்தூர் குளத்தில் பறவைகள் காணலும் இயற்கை நடை

image

நம்பியூர் அருகே எலத்தூரில் நவம்பர் 02ஆம் தேதி மாலை 3:30 முதல் 6:00 மணி வரை வடக்கு ஐரோப்பா, ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் பயணித்து ஈரோடு மாவட்டம் எலத்தூர் குளத்திற்கு வந்துள்ள வலசை பறவைகள் குறித்தும், நமது சூழல் பற்றியும் அறிந்து கொள்ள நிகழ்வில் காலநிலை மாற்றம் குறித்த சிறு கலந்துரையாடல் நடைபெறும். முன்பதிவு செய்ய https://bit.ly/Nature_Wal_89.