India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு காவல்துறை மூலம் பொதுமக்கள் காவல்துறையின் உதவியை விரைந்து பெறும் வகையில் 60 க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் ‘காவல் உதவி’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கூகுல் ஃப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் ஆபத்து நேரங்களில் உடனடியாக காவல்துறையின் உதவியை பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பவானியை அடுத்த காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பத்மினி. இவர் நேற்று குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பவானி புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி பத்மினி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பத்மினி உயிரிழந்தார். இதுபற்றி பவானி போலீசார் விசாரித்து வருகின்றார்.
ஈரோடு, வ.உ.சி பூங்கா பகுதியில், ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆம்னி வேனில் 660 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. ரேஷன் அரிசி கடத்திய சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு சூரம்பட்டி திரு.வி.க. வீதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் மக்களவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தங்கள் பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், டாஸ்மாக் கடையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.
மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாடு -கர்நாடக எல்லைப் பகுதியான தட்டைத் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவத்தினர் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்புக்கு பின்பு அனைத்து வாகனங்களும் இரு மாநில எல்லைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அதன் விபரங்களை பதிவு செய்து கொண்டு அனுப்பி வருகின்றனர்.
சத்தியமங்கலம் பண்ணாரி சரகத்தில் வனத்துறையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு பெண் யானை ஒன்று வயது முதிர்வு காரணமாக கீழே படுத்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்த பெண் யானை அருகே சுமார் 2 முதல் 3 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று சுற்றி சுற்றி வந்து பிளரி கொண்டிருந்தது.
இதைப்பார்த்த வனத்துறையினர் கண் கலங்கினர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். மேலும் விடுப்பு வழங்காத நிறுவனங்கள் புகார்களை 99943 80605 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என, ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வினோத்குமார் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் உக்கிரன் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் இருந்து குச்சி கிழங்குகளோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் மாவட்டம் மல்லூருக்கு சென்றது. அத்தியப்ப கவுண்டன் புதூர் பிரிவு அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. லாரியின் பயணித்த 7 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கொடுமுடி அருகே தளுவம்பாளையம் பகுதியில் உள்ள டீக்கடை அருகே அழுகிய நிலையில் 55 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கிடப்பதாக நேற்று கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இறந்த நபர் குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கோபி சட்டமன்ற தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர் 860 பேருக்கு தபால் ஓட்டு அளிக்கப்பட்டது. இதில் 827 பேர் ஓட்டு பதிவு செய்தனர். 22 பேர் வெளியூர் மற்றும் சிகிச்சைக்கு சென்று விட்டனர். மற்ற 11 பேர் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதிக்குள் வயது முதிர்வால் இறந்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.