India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் வயது 84 என்பவர் தனது ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக இன்று மதியம் வீல்சேரில் வந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவர், “தான் இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் வாக்களித்துள்ளதாக பெருமையுடன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் – 2024, வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, சம்பத்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வரிசையில் நின்று வாக்களித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, 36 அதிவிரைவுப் படை (கியூஆர்டி) குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 36 குழுவில் ஒரு ஆய்வாளர், 3 போலீசார் என 144 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக அங்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறை அமலானது முதல் நேற்றுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 171 புகாா்கள் வந்துள்ளன. மேலும் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது தொடா்பான வந்த 24 புகாா்கள் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் விசாரணை நடத்தியதாகவும், விதிமீறல் நடந்த இடத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாளவாடி பகுதியில் இன்று பலத்த சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால், தாளவாடி பகுதியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்ததால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க தேர்தல் ஆணையத்தால்உத்தரவிடப்பட்டுள்ளது . மேலும் பொது விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நாளை 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோர் (ம) மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என கோவை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து செல்லலாம்.
ஈரோடு, தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 15-வது கொண்டை ஊசி வளைவில் இன்று காலை ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நோக்கி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி வெயில் வெளுத்து வாங்கு வரும் நிலையில், நேற்று(ஏப்.17) மட்டும் 14 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்துள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று 106.52 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கல் அதிகரித்தே காணப்படுவதால் முதியவர்கள், குழந்தைகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.