Erode

News November 6, 2024

வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை, ஈரோடு கலெக்டர் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று ஆய்வு செய்தார். இதில் சோலார் – புதிய பேருந்து நிலையம், ரங்கம்பாளையம் – நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி, பெரும்பள்ளம் ஓடை தூர்வாரும் பணி, கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

News November 6, 2024

ஈரோட்டிற்கு 2000 டன் நெல் மூட்டைகள் 

image

நாகப்பட்டினம், நீடாமங்கலத்தில் சாகுபடி செய்யப்பட்ட 2000 டன் நெல் மூட்டைகள் ஈரோடு மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக இன்று ரயில் மூலம் ஈரோடு கொண்டுவரப்பட்டன. அவற்றை பொது வெளியாகத் திட்ட அதிகாரிகள் லாரிகளில் ஏற்றி கொண்டு வந்தனர். இதனையடுத்து நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டன.

News November 5, 2024

இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤ ஈரோட்டில் நவம்பர் 22, 23, 24ஆகிய தேதிகளில் மாபெரும் விவசாய கண்காட்சி நடைபெறவுள்ளது. ➤ மொடக்குறிச்சியில் அரசு பேருந்து மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ➤ ஈரோட்டிற்கு ரயில்களில் 2000 டன் நெல் மூட்டைகள் வந்தன. ➤ மொடக்குறிச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ சரஸ்வதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

News November 5, 2024

அரசு பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

image

மொடக்குறிச்சி, பாரதி நகரை சேர்ந்த தம்பதி அமரேஸ்-ராணி. இந்நிலையில், இன்று ராணி தனது மகன் அபினவை (5) பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சி யூனியன் அலுவலகம் அருகே சென்றபோது, வெள்ளக்கோவிலில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் அபினவ் காயங்களுடன் உயிர் தப்பினார்.

News November 5, 2024

மாபெரும் விவசாய கண்காட்சி

image

ஈரோடு மாவட்டம், பெருந்துறை – சக்தி திருமண மண்டபத்தில் (பேருந்து நிலையம் பின்புறம்) மாபெரும் விவசாய கண்காட்சி 2024, நவம்பர் 22, 23, 34 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் விவசாய பொருட்கள், உணவு பொருட்கள், மாடித் தோட்ட விதைகள், தானியங்கள், பால் பண்ணை பொருட்கள், இயற்கை உரங்கள், இடுபொருட்கள், விவசாய எந்திரங்கள், கால்நடை வளர்ப்பு போன்றவை இடம்பெற உள்ளது.

News November 5, 2024

பெருந்துறையில் மஞ்சள் ஏலம்

image

பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் இன்று (5ஆம் தேதி) நடைபெற்றது. இதற்கு 64 மஞ்சள் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதில் 46 மூட்டைகள் ஏலம் போனது. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் (100 கிலோ) ஒன்று ரூ.8 ஆயிரத்து 889 முதல் ரூ.13 ஆயிரத்து 19 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 139 முதல் ரூ.11 ஆயிரத்து 869 வரைக்கும் விற்பனை ஆனது.

News November 5, 2024

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய தவெகவினர்

image

சென்னிமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக சிரமத்தில் இருந்து வந்தார். இவரது நிலைமையை அறிந்த சென்னிமலை நகர தலைமை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். அந்த பெண்ணிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். மேலும் அந்த பெண் சிறு தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்வதாக தெரிவித்தனர். கட்சியின் சென்னிமலை நகர தலைமை தலைவர் உடனிருந்தார்.

News November 5, 2024

ஈரோட்டில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

image

தமிழ்நாடு பள்ளி கல்வி துறை சார்பில் ஈரோட்டில் நாளை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு வஉசி திடலில் நடைபெறுகின்றன. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 7000 மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து விளையாட்டு அலுவலர் சாலமன் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதியும், மருத்துவ வசதியும், தங்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News November 5, 2024

ஈரோடு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை

image

ஈரோடு மாநகராட்சி எஸ்கேசி ரோட்டில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவி ஆர்.நேத்ரா ஸ்ரீ மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் நான்கு பிரிவுகளில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இதற்கான பாராட்டு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை சுமதி பதக்கங்களை வழங்கி மாணவியை பாராட்டினார். சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

News November 5, 2024

கொடிவேரி அணைக்கு செல்ல இன்று ஒரு நாள் தடை

image

ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணை இன்று (5.11.2024) சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல் கடந்த இரு நாட்களுக்கு முன் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!