India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டல் முருகன் கோவில், ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் வழியில் 60 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்குன்றில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. கொங்கு நாட்டு ஆலய அமைப்பில், தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாக இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்திருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.
மழை பெய்து வெப்பம் தணிவதற்காகவும், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவும், விவசாயிகள் நலன் காக்கவும், நாடு செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கருங்கல்பாளையம் காவேரிக்கரையில் சிவாச்சாரியார்கள்,வருணபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். 21 சிவாச்சாரியார்கள் காவிரிக்கரை படித்துறையில் அமர்ந்து பூஜை செய்தனர். பிறகு காவிரி ஆற்றில் ஒரு மணி நேரம் சிவாச்சாரியார்கள் இறங்கி ஜெபித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, 3 மையங்களில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இந்த பணியில் 1,320 ஆசிரிய-ஆசிரியைகள் ஈடுபட்டனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று நிறைவுபெற்றது. இன்று (24ஆம் தேதி) முதல் மதிப்பெண்கள் கணினி மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற உள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சம்பத் தெரிவித்தார்.
பவானி மூன்ரோட்டிலுள்ள முனியப்பன் கோவிலில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தயாரிக்கப்படும் காளமாடு கண்ணுபட்டது என்ற சினிமா பட பூஜை விழா இன்று
நடந்தது. அந்தியூர், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்க திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகனாக அறிமுகமாகும் அச்சு, கதாநாயகி தேஜாஸ்ரீ இருவரும் புதுமுகங்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து காமெடி, காதல் கலந்த கதையாக எடுக்கப்படுகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகள் நேற்று இரவு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்றும் 2வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சமூக நலத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மிஸ் கூவாகம் 2024 நிகழ்ச்சி நடந்தது. இதில் திருச்சி, சேலம், சென்னை, துாத்துக்குடி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஈரோடு, கோவை பகுதிகளை சேர்ந்த 27 திருநங்கைகள் பங்கேற்றனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, ரியா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சியின் 2023-2024 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் மற்றும் நிலுவை வரிகளை கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் வசூலிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலால், வரி செலுத்த மக்களை கட்டாயப்படுத்தவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நிறைவின் காரணமாக தற்போது மாநகராட்சி அலுவலர்கள், வரி பாக்கி வைத்துள்ள வீடுகளில் வரி வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.அதன்படி நேற்றைய வெயில் நிலவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டது.அதில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களில் ஈரோடு 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் வரும் 26ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு – கர்நாடகா எல்லையான, ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தாளவாடியில் உள்ள அரசு மதுபான கடை (கடை எண் : 3948) மற்றும் அதனுடன் இயங்கும் பார் ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய 3 நாட்கள் மூடப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.