India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாநகராட்சியில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 ஆய்வக தொழில்நுட்ப அதிகாரி காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை நவம்பர் 25ஆம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என ஈரோடு ஆணையாளர் என்.மனிஷ் தெரிவித்துள்ளார்.
பெருந்துறை, காஞ்சிக்கோயில் உள் வட்டம் கந்தம்பாளையம் கிராமம் அம்மன் திருமண மண்டபத்தில் வரும் 13-ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிகளும் கலந்து கொண்டு பொதுமக்கள் மனுக்கள் மீது தீர்வு காண உள்ளனர். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெருந்துறை பகுதியில் செயல்பட்டு வரும் பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருளின் தயாரிப்பு முறை மற்றும் தரம் குறித்து ஆய்வு இன்று (9/11/24) மேற்கொள்ளப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாநில ஆணையாளர் லால்வேனா ஆய்வு செய்தார். உடன் ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று போக்குவரத்து போலீசார் பஸ் நிலையத்திற்கு வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் இருசக்கரத்தில் அத்துமீறி நுழைந்த வாலிபருக்கு போக்குவரத்து போலீசார் ரூ.3500 அபராதம் விதித்து மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். ஆத்திரத்தில் மற்ற வாகனங்களையும் வழி மறித்து அபராதம் விதிக்கச் சொல்லி இளைஞர் தொந்தரவு செய்த கூறப்படுகிறது.
தளவாய்பேட்டை வினோபா நகரில் புதுவீடு கிரகப்பிரவேசத்திற்காக சித்ரா (38) சமையல் வேலைக்கு சென்றிருந்தார். அப்போது, தக்காளி வெட்டும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து, அங்கே இருந்தவர்கள் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இன்று (09.11.2024) காலை சத்தியிலிருந்து சுமார் 35 பயணிகளுடன் கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், கோவையிலிருந்து சத்தி நோக்கி வந்த காரும் எதிரெதிரே மோதிக்கொண்டன. இச்சம்பவத்தில் இரு வாகனங்களும் பெரிதும் சேதமடைந்த போதிலும் பயணிகளும், காரில் வந்த இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மாநில அளவிலான தடகள போட்டி ஈரோடு வஉசி பூங்காவில் கடந்த 6ஆம் தேதி துவங்கியது. இதில் மாணவிகளுக்கு நடைபெற்ற தடகளப்போட்டியில் 2 ஆயிரத்து 518 வீராங்கனைகள் பங்கேற்றனர். 43 வகையான போட்டிகள் நடைபெற்றன. நேற்று தடகளப் போட்டிகள் நிறைவடைந்தன. இதில் கோவை மாவட்ட அணி 54 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இன்று ஆண்களுக்கான தடகளப் போட்டி துவங்குகின்றன.
ஈரோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மாதம் சராசரியாக 18 ஆயிரம் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தலைமை ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் சு.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சராசரியாக இறப்பு விகிதமும் குறைந்துள்ளதாகவும், மக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதாகவும், சிறந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிடலாகவும் செயல்படுகிறது என தெரிவித்தார். பல மாவட்டங்களில் இருந்து வந்தும் சிகிச்சை பெறுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 20.11.2024 வரை விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும். மேலும் விபரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
சென்னிமலை டூ பெருந்துறை செல்லும் மெயின் ரோட்டில் உள்ள கொளத்துப்பாளையம் பிரிவு அருகே லாரியும், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வேனும் இன்று மாலை நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் நிறுவனத்தின் வேன் டிரைவர் கால் முறிந்தது. மேலும் ,வேனில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். மீட்கப்பட்டு பெருந்துறை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.