India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் இருந்து பர்கூர் மலை பாதை வழியாக கர்நாடகா சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று பர்கூர் மலைப்பகுதி தக்கரை என்ற இடத்தில் 5 அடி பள்ளத்தில் கார் தவறி விழுந்தது. தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இருந்த ஐந்து பேர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு கோட்டாட்சியர் சதீஷ்குமார் நீலகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு கோட்டாட்சியராக பணியாற்றிய சதீஷ்குமார் நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அரியலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய ரவி, ஈரோடு கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோபி அருகே பச்சைமலையில், சுப்பிரமணிய சுவாமி (முருகன்) திருக்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோவிலில், நடப்பாண்டு கந்தசஷ்டி மற்றும் திருக்கல்யாண உற்சவம் நாளை (நவம்பர் 2) தொடங்கி நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவாக நாளை சஷ்டி விரதம் காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் பல்வேறு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
தீபாவளியை ஒட்டி கடைகளில் தள்ளுபடி அறிவிப்பது வழக்கம். அதன்படி, தீபாவளிக்கு மறுநாளான இன்று, ஈரோட்டில் உள்ள பிரபல துணி கடையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே கடை முன் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்த காரணத்தால் அதிகாலையிலேயே விற்பனை தொடங்கப்பட்டது. கடை திறந்ததும் கூட்டத்துடன் துணிகளை மக்கள் வாங்கி சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கோபி, பவானி கிளை தபால் நிலையங்களில் கங்கை புனித நீர் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகம், அமாவாசை. உள்ளூர் திருவிழாவிற்கு கங்கை புனித நீர் தேவைப்படும் பொதுமக்கள் அங்கு சென்று 250 மி.லி., புனித நீரை ரூ.30 செலுத்தி வாங்கி கொள்ளலாம் என ஈரோடு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கோபால் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று (இரவு 7 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக (மஞ்சள் அலர்ட்) சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றான நம்ம ஈரோடு செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி முன்புறம், பெரிய மாரியம்மன் கோவிலுக்கு எதிரே “நம்ம ஈரோடு” என்ற செல்பி பாயிண்ட் தற்போது புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு மக்கள் மற்றும் ஈரோடு வரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் செல்பி எடுத்து செல்கின்றனர்.
தமிழக முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, இந்தத் தீப ஒளி திருநாளில், இருள் நீங்கி, இன்பங்கள் பெருகி, உள்ளங்கள் மகிழட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மூத்த அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டம் – மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி, எங்கும் ஒளி பரவட்டும், இன்பம் பெருகட்டும் என மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக, அன்பு எங்கும் நிறையட்டும் மனதில் மகிழ்ச்சி பெருகட்டும் என அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் மற்றும் தீ விபத்தை தடுக்க தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.